ஆன்லைன் பர்ச்சேஸ் ஆபத்தா?
Page 1 of 1
ஆன்லைன் பர்ச்சேஸ் ஆபத்தா?
ஆன்லைன் மூலமாக ஒரு பொருளை வாங்க நினைக்கிறேன். எப்படி வாங்குவது? ‘ஆன்லைன் பர்ச்சேஸில் நிறைய ஏமாற்று வேலைகள் நடக்கலாம்’ என்கிறார்களே, உண்மையா?
பதில் சொல்கிறார் ராஜேஷ் நஹர் (இணை நிறுவனர்) முதன்முதலாக ஆன்லைன் பர்ச்சேஸுக்கு வந்திருக்கிறீர்கள். வெல்கம். இதுவரை பணத்தைப் பத்திரப்படுத்தி, கூட்ட நெரிசலில் திணறித்தானே எந்தவொரு பொருளையும் வாங்கிக் கொண்டிருந்தீர்கள். இனி அதற்கு குட்பை சொல்லி விடலாம். வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் இப்போது வீடு தேடி வருகின்றன. தேவை, ஒரே ஒரு கம்ப்யூட்டர். வீட்டில் இல்லாவிட்டால், இருக்கவே இருக்கிறது பிரௌசிங் சென்டர்கள்.
நீங்கள் வாங்க நினைக்கும் பொருள் கிடைக்கும் நிறுவனம் பற்றி முதலில் ‘இன்டர்நெட்’டிலேயே தகவல்களைத் தேடிப் பார்க்க வேண்டும். ‘எப்போது தொடங்கப்பட்டது’, ‘எவ்வளவு கஸ்டமர்கள்’, ‘விற்பனையான பொருள்கள் மீது ஏதேனும் புகார் வந்துள்ளதா’ என்பன போன்ற விபரங்கள் அப்போது கிடைக்கும். அதை வைத்து மேற்படி நிறுவனத்தில் பொருள் வாங்கலாமா என்று தீர்மானித்து விடலாம். பிறகு நிறுவனத்தின் வெப்சைட்டில் நுழைந்தால், அங்கு கிடைக்கும் பொருள்களின் புகைப்படங்களும் விளக்கங்களும் விலையும் இருக்கும். அவற்றை நிதானமாகப் பார்த்துப் படித்த பின், ‘வாங்க விரும்பினால் கிளிக் செய்ய’ கேட்கும் இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். அதற்கு முன் பொருள் குறித்து தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நிறுவன ஊழியர்களிடம் ‘சேட்டிங்’ மூலம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து ‘பேமன்ட் எப்படி’ எனக் கேட்டு, கிரெடிட், டெபிட் கார்டுகள், ஆன்லைன் பேங்கிங் மற்றும் பணம் என ஆப்ஷன்கள் இருக்கும். தங்களுக்கு எது வசதியோ அதைக் கிளிக் செய்யவும். பொருள் வீடு வரும்போது பணம் செலுத்தினால் போதும் என்கிற நிலை வந்து வெகுநாளாகி விட்டது. பிறகு தங்கள் முகவரியை டைப் செய்துவிட்டு, கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணிவிடலாம். நீங்கள் விரும்பிய பொருள் அடுத்த ஓரிரு நாட்களில் (சில பொருட்கள் சில மணி நேரங்களிலேயே) வீட்டிற்கு வந்து விடும்.
ஆன்லைன் பிசினஸில் ஏமாறுவதும் ஏமாற்றுவதும் ஆரம்பகாலத்தில் நடந்தது. இன்று நிலைமை மாறியுள்ளது. பொருளைக் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்து ஓகே சொல்கிறார்கள். அவற்றை நேரில் பார்க்கும்போது ‘அதுதானா இது?’ என்கிற சந்தேகம் மக்களுக்கு வருகிறது. அதனால் பொருள் மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள் சிலர். அதேபோல ஆன்லைன் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும்போது, பிரௌசிங் சென்டர், ஆபீஸ் போன்ற பொது கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இவை தவிர, ஆன்லைன் பர்ச்சேஸில் வேறெந்த சிக்கலுக்கும் இப்போது இடமில்லை. -

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மானுக்கு கொம்பு ஆபத்தா?
» மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
» திருமணத்திற்கு முன் பாலுறவால் ஆபத்தா?
» ஏசி காரில் தூங்குவது உயிருக்கு ஆபத்தா..???
» அழகு சாதனப் பொருட்களால் ஆபத்தா?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum