அழகு சாதனப் பொருட்களால் ஆபத்தா?!
Page 1 of 1
அழகு சாதனப் பொருட்களால் ஆபத்தா?!
இன்றைக்கு பெரும்பாலான பெண்கள், நாடி ஓடும் இடம் அழகு நிலையம். அங்கே அழகுபடுத்த பயன்படும் சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்பானவை தானா? எவ்வித கெடுதலும் இல்லையா? என்றால் தெரியாது என்று பதில் அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்!
பெரும்பாலும் அதிக விலை கொண்ட பொருட்களே அதிக பிரச்சினைகளைக் கொடுக்கிறது என்பதும் இவர்களின் கருத்து. அவற்றில் சேர்க்கப்படும் செயற்கைப் பொருட்களினால் விலை உயருகிறது. மேலும் சருமத்தையும் வேதனைப்படுத்துகிறது. இன்றைக்கு சந்தையில் ஒரு பொருள் புதிதானது, விலை அதிகம் என்றால் அதில் அதிகமான ரசாயனங்கள் கலந்திருக்கிறது என்று அர்த்தம்!
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கீழ் அழகு சாதனங்கள் என்பது, உடல் அமைப்பு அல்லது அதன் பணியை மாற்றாது சுத்தப்படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணியை செய்ய வேண்டும் என்பதே.
நம்முடைய சருமத்தில் அழகு சாதனப் பொருட்கள் பூசப்படுவதால் அது நம்மை பாதிக்காது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில், அந்தப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் தோலில் ஊடுருவிச் செல்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். மேலும் அழகு சாதனங்களிலிருந்து வெளியாகும் ரசாயன வாயுக்களை நாம் சுவாசிக்கின்றோம் என்பதை இங்கே நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, கூந்தல் மற்றும் பாடி ஸ்ப்ரே, டால்கம் பவுடர் ஆகியவற்றை சுவாசிப்பதையும், உதடுகளில் தடவும் லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனம் வாயில் நுழைந்து, உடலுக்குள் செல்வதையும் தவிர்க்க முடியாது. மனதுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அழகு சாதனங்கள் நமது உடலுக்குள் புகுந்து பாதிப்பை உண்டாக்குகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
வழக்கமாக கூந்தல் ஸ்ப்ரேயை பயன்படுத்துவதால் 'திசொரொசின்' எனப்படும் நுரையீரல் நோய் ஏற்படலாம். இந்நோய் ஏற்படும் பெரும்பாலானவர்கள் கூந்தலுக்கு ஸ்ப்ரே பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அதேபோல், பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பயன்படுத்துவதும் அபாயகரமானது. இந்த ஷாம்புவில் பயன்படுத்தப்படும் ரசாயனம் செலினியம் சல்பைடை விழுங்கினால் கிட்னி, ஈரல், வயிறு மற்றும் இதர உறுப்புகளில் கோளாறை ஏற்படுத்தும். "ரிகொர்னல்" எனப்படும் பொருளும் மற்ற பிரச்சினைகளை உருவாக்கும். ஹேர்டைகளில் குறைந்த பட்சம் 20 விதமான புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்களைப் பயன்படுத்துவதாக, அமெரிக்க பயனீட்டாளர் அறிக்கை அறிவித்துள்ளது.
நக பாலிஷ்களும் நகங்களில் வர்ணத்தை மாற்றுவதோடு, நகத்துக்கு அடியில் ரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது.
லிப்ஸ்டிக்கிற்கு அடுத்தபடியாக அபாயமான பொருளாகக் கருதப்படுவது மஸ்காரா. இதில் பார்மால்டிஹைடு, மது போன்றவை இருக்கிறது. இது கண் எரிச்சல், கண் சிவப்பேறுதல், எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
டால்கம் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் கலப்பிருந்தால் அது மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. நம் உடலில் டால்கம் பவுடரை பூசும்போது நாம் அதனை சுவாசிப்பதால் அதிலுள்ள ரசாயனப் பொருட்களும் நம் உடலுக்குள் செல்கின்றன. பெண்களின் மர்மப் பகுதியில் டால்கம் பவுடர் தடவப்படும்போது அவை தோலினால் ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. இதுவும் பல பிரச்சினைகளை உருவாக்கும்.
இப்படிப் பார்க்கையில் எல்லாவிதமான அழகு சாதனங்களும் அபாயகரமானவை என்றே கூறப்படுகிறது. இதிலுள்ள ஒரு வித்தியாசம், சில சாதனங்கள் குறைந்த அளவிலும், சில சாதனங்கள் அதிகளவிலும் அபாயமானவை என்பது மட்டும் கசப்பான உண்மையாகும்.
இன்றைக்கு இயற்கையானவை என்று கூறிக்கொள்ளும் அழகு சாதனங்களும், நூறு சதவீதம் நம்பகத்தன்மையானவை என்று சொல்ல முடியாது. இயற்கையானவை என்று கூறிக் கொள்ளும் பல அழகு சாதனங்களில் இயற்கையான பொருளோடு, செயற்கைப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன என்பதே நிதர்சனம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!
» நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!
» கருக்குழந்தைக்கு ஆபத்தாகும் அழகு சாதனப் பொருட்கள் – எச்சரிக்கை தகவல்
» இளமையை தக்கவைக்கும் இந்தியாவின் பாரம்பரிய அழகு சாதனப் பொருட்கள்!
» அழகுசாதன பொருட்களால் ஆபத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum