தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேளிமலை குமாரகோவில்

Go down

வேளிமலை குமாரகோவில் Empty வேளிமலை குமாரகோவில்

Post  meenu Mon Jan 14, 2013 3:19 pm

ஆன்மிகத்திற்கும் குமரி மாவட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதற்கு அடையாளமாக, பிரசித்திபெற்ற பல கோவில்களை அங்கு காண முடிகிறது. அந்த வரிசையில் அமைந்த திருத்தலம்தான் வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி திருக்கோவில்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் வீற்றிருப்பான் என்கிற கூற்றை நிரூபிக்கும் வகையில் மலைக்குன்றின் மீது இந்த திருத்தலம் அமைந்துள்ளது. முருகப்பெருமானுக்கு காதல் வேள்வி நடந்த திருத்தலம் இது என்பதால் இந்த இடம் வேள்விமலை என்று அழைக்கப்பட்டு, அதுவே வேளிமலையாக மாறியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தெய்வானையோடு திருமணக் கோலத்தில் அருள் பாலிக்கும் முருகப்பெருமான், இங்கு வள்ளியோடு கோவில் கொண்டுள்ளார். மேலும், அறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடு `திருவேரகம்' என்று குறிப்பிடப்படுகிறது.

அது, இன்றைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையாக கருதப்படுகிறது. ஆனால், திருவேரகம் என்பது இந்த வேளிமலையைத்தான் குறிக்கும் என்று கூறுவோரும் உண்டு. சுப்பிரமணியர் வேடுவனாக, வளையல் விற்பவராக, கிழவனாக வந்து வள்ளியுடன் காதல் லீலையில் ஈடுபட்ட திருத்தலம் இது என்பதற்கு ஆதாரமாக சில அடையாளங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

* வள்ளியை காண வந்த வேலவன், தினை மாவு உட்கொண்டபோது தொண்டையில் அது விக்க... வள்ளி ஓடோடிச் சென்று நீர் எடுத்து வந்த சுனை இன்றும் இங்கு உள்ளது.

* பங்குனி மாதம் அனுஷம் நட்சத்திரம் அன்று இங்கு நடைபெறும் முருகப்பெருமான்-வள்ளி திருக்கல்யாணத்தில் வள்ளியின் சார்பாக வேடர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் நடத்தும் `குறவர் படுகளம்' நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்புமிக்கது.

* விநாயகர் யானையாக வந்து, முருகன்-வள்ளி திருமணத்திற்கு உதவி அருள் புரிந்ததை இங்குள்ள வள்ளிக்குகை பிள்ளையார் கோவில் நினைவுபடுத்துகிறது.

- இப்படி, இதுதான் திருவேரகம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இங்கே தரப்படுகின்றன.

வள்ளியை வேலவன் மணம் புரிந்த திருத்தலம் வேளிமலை என்பதால் இங்கு தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர் நிறையபேர் இருக்கிறார்கள். இங்கு நடத்தப்படும் திருமணங்கள் முறைப்படி பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிறப்புகள்:

தற்போது ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள மலையை பக்தர்கள் வலம் வருதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் கிரிவலம் வரும் வழக்கம் இங்கு துவங்கியது. இங்கு பவுரிணமி கிரிவலம் வருவதால் குழந்தை பாக்கியம், நல்ல வேலை, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள்.

அங்கபிரதட்சணமாக, அடிபிரதட்சணமாக, தேங்காயை உருட்டிக்கொண்டு, சாதாரண கால்நடையாக...

என்று நான்கு வழிமுறைகளில் இங்கு கிரிவலம் வருகின்றனர். தேங்காயை உருட்டிக்கொண்டு வரும் கிரிவல முறையில், தேங்காயை முடிந்த அளவிலான வேகத்தில் உருட்டி விடுகின்றனர். தேங்காய் குறிப்பிட்ட இடத்தில் போய் நின்றதும் மீண்டும் உருட்டி விடுகின்றனர். இப்படியாக வேளிமலையை கிரிவலம் வருகின்றனர்.

போக்குவரத்து வசதி:

நாகர்கோவில் -திருவனந்தபுரம் சாலையில் உள்ள தக்கலையில் இருந்து 4.கி.மீ. தொலைவில் வேளிமலை அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தனியார் மற்றும் அரசுபேருந்து மூலம் நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரம் சென்று பின் அங்கிருந்து தக்கலை செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலுக்கு சொல்லும்.

எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரம் சென்று பின் அங்கிருந்து தக்கலை செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலுக்கு சொல்லும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum