எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் பாதித்தவருடன்...
Page 1 of 1

எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் பாதித்தவர்களை பல்வேறு இடங்களில் மனித நேயமின்றி நடத்துகின்றனர். அது தவறு. அவர்களையும் மனிதர்களாக மதியுங்கள். அன்பைப் பொழியுங்கள்.
எய்ட்ஸ் என்பது என்ன?
எச்.ஐ.வி. என்ற வைரஸ் பாதித்தவரின் உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை அழித்துவிடும். எனவே எச்.ஐ.வி. பாதித்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகும். எந்த நோயும் எளிதில் தொற்றிக் கொள்ளும்.
ரத்தத்தை சோதனை செய்து அதில் எச்.ஐ.வி. கிருமி இருந்தால், அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எச்.ஐ.வி. கிருமி உடலுறவு, ரத்த பரிமாற்றம், ஊசிகள் மூலமாகப் பரவுகிறது.
எச்.ஐ.வி. என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்று விளம்பரப்படுத்துவதே தவறு என்று கூட கூறப்படுவதுண்டு. ஏனெனில் புற்று நோய், மூளைக்காய்ச்சல், இதய நோய் போன்ற எந்த நோய் பாதித்தும் மனிதன் சாகலாம். ஆனால் எச்.ஐ.வி. பாதித்தும் முறையான சிகிச்சை பெற்றால் 12 ஆண்டு காலத்திற்கும் மேல் வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்க எச்.ஐ.வி.யை ஏன் உயிர்க்கொல்லி என்றார்கள்? ஆம், இது மனிதன் செய்யும் சில தகாத காரியத்தால் அதிகளவில் பரவி வருவதால் அதன் மீது அச்சம் எழவும், ஒரு முன்னெச்சரிக்கையை செய்யவும்தான் இவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்டது.
சரி எச்.ஐ.வி. பாதித்தவர்களால் சாதாரணமாக வாழ இயலுமா? என்றால் இயலும் என்றே கூறலாம். அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான்.
எச்.ஐ.வி. பாதித்தவர்களுக்கு என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுவோம்.
என்னென்ன செய்யலாம்.
* அவர்கள் மீது கருணை காட்டுங்கள்.
* குடும்ப மற்றும் சமூக ஒத்துழைப்பு தாருங்கள்.
* அவர்களை குடும்பத்தில் ஒருவராக நடத்துங்கள். அவர்களையும் குடும்ப உறுப்பினராக இருக்க விடுங்கள்.
* உடல்நிலை சீராக இருந்தால் அவர்களை அவர்களது பணியைத் தொடர விடுங்கள். தேவையற்ற ஓய்வு வேண்டாம்.
* ஏதாவது ஒரு பணியில் அவர்களை கவனம் செலுத்த வையுங்கள்.
* அவர்களது மன அழுத்தத்தை குறைக்க முற்படுங்கள்.
* உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்ய ஊக்குவியுங்கள்.
* ஊட்டச்சத்து மிக்க உணவு, வைட்டமின், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க செய்யுங்கள்.
* சுத்தமான குடிநீரை கொடுங்கள்.
* புகையிலை, குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற எந்த கெட்டப் பழக்கங்கள் இருந்தாலும் அதை நிறுத்திவிடச் சொல்லுங்கள்.
* முறையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.
* சிறிய உடல்நலப் பிரச்சினை என்றாலும் கூட மருத்துவரை அணுகுங்கள்.
* ஏதேனும் காயம் ஏற்பட்டால் முதலுதவி தருவதிலும் கவனம் தேவை. காயத்தை கழுவும் சோப்பினால் கூட பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு.
* அவர்களது ரத்தம் பட்ட பஞ்சு, பான்டேஜ் போன்றவைகளையும் கூட மிக கவனமாக அப்புறப்படுத்துங்கள்.
* மிகப் பாதுகாப்பான உடலுறவு கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள். அவரது துணைக்கு ஏற்கனவே எய்ட்ஸ் இருந்தாலும் கூட அவர்கள் ஆணுறை பயன்படுத்துவதை வற்புறுத்துங்கள்.
* அவர்களது குழந்தைகள் மீது அதிக அக்கறை செலுத்துங்கள்.
* அவர்களது உடலில் எச்.ஐ.வி.யின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை அவ்வப்போது சோதனை செய்யுமாறு அறிவுறுத்துங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் பாதித்தவருடன்...
» எய்ட்ஸ் பாதிப்பா?
» எய்ட்ஸ் ஐ முழுமையாக குணமாக்க முடியும்?
» எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதில் முக்கிய கண்டுபிடிப்பு
» ஓரினச்சேர்க்கையால் பயங்கரமாக பரவும் ‘எய்ட்ஸ்’ நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum