குழந்தைகளுக்கு புற்று நோய் : இந்தியா எதிர்கொள்ளும் சவால்!
Page 1 of 1
குழந்தைகளுக்கு புற்று நோய் : இந்தியா எதிர்கொள்ளும் சவால்!
webdunia photo FILE
நமது நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 15 முதல் 20 விழுக்காட்டினர் மட்டுமே அதற்கான உரிய சிகிச்சையை பெறக்கூடியவர்களாக உள்ளனர்!
சர்வதேச குழந்தை புற்றுநோய் நிபுணர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு மும்பையில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இம்மாநாடு குறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புற்றுநோய் மருத்துவர் ரேஷ்மி தால்வி கூறினார்.
இந்தியாவில் முதன் முறையாக மும்பையில் வரும் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை 39வது சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் காங்கிரசின் மாநாடு நடைபெறுகிறது. தேசிய செயல்கலை மையம், மும்பை ஜாம்ஷெட்ஜி பாபா திரையரங்கில் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டை வரும் 31 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் எஸ்.எம். கிருஷ்ணா தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக டாடா நினைவு மருத்துவமனையின் பொறுப்பாளரும், குழந்தைகள் புற்றுநோய் பிரிவு பேராசிரியருமான மருத்துவர் பூர்ண குர்கியூர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஆண்டுதோறும் 1,60,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், இதில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். இதற்கு காரணம் இந்நோயை தடுப்பதற்கான வழிமுறைகள் குறைவாக இருப்பதும், நோயைக் கண்டறிவது காலதாமதமாகவும், சில நேரங்களில் நோயைக் கண்டறிய இயலாமல் போவதும் அதிகப்படியான இழப்புக்கு காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.
உடலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கான காரணிகள் மற்றும் அறிகுறிகள் காணப்படுவதன் அடிப்படையில் 85 விழுக்காடு குழந்தை புற்றுநோய்க்கான அறிகுறிகள் இவைதான் : கண்ணில் ஏற்படும் ஒளி வண்ணம், வீங்கிய தலை, நீண்ட கால் மற்றும் விவரிக்க இயலாத காய்ச்சல், எதிர்பாராத வயிற்று வலி அல்லது எரிச்சல், காரணமில்லாத ரத்தப்போக்கு, சொரிந்தால் காயமாதல் ஆகியவை சில அறிகுறிகள் என்று கூறினார்.
பொதுவாக குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்கள் : ரத்தப் புற்றுநோய், மூளைக்கட்டி, சிறுநீரகம், தசை, எலும்பு புற்றுநோய், நிணநீர், நரம்பு பகுதிகளைத்தான் அதிகமாகத் தாக்குகின்றன. இந்த வகையான புற்றுநோய்களை குணப்படுத்த மருந்துகள், அறுவை சிகிச்சை, ரேடியோ கதிர் வீச்சு ஆகியவை தனித்தனியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றின் உதவுயுடனோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயின் அறிகுறி தென்பட்ட ஆரம்ப நிலையிலேயே இனங்கண்டறியப்படும் பட்சத்தில் எளிய சிகிச்சை முறைகளை பயன்படுத்தினாலே வெற்றி விகிதாச்சாரம் அதிக அளவில் இருந்துள்ளதாகவும் மருத்துவர் குர்கியூர் தெரிவித்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைகளுக்கு புற்று நோய் : இந்தியா எதிர்கொள்ளும் சவால்!
» கண்களிலும் புற்று நோய் வரும்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» புற்று நோய்
» மார்பக புற்று நோய்
» கண்களிலும் புற்று நோய் வரும்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» புற்று நோய்
» மார்பக புற்று நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum