மகப்பேறின்போது 5 லட்சம் பெண்கள் மரணம்
Page 1 of 1
மகப்பேறின்போது 5 லட்சம் பெண்கள் மரணம்
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் கர்ப்ப காலங்களிலும், குழந்தை பிறக்கும் தருவாயிலும் சுமார் 5 லட்சம் பெண்கள் உயிரிழப்பதாக யூனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் பெரும்பாலும் அதிக ரத்தப்போக்கு காரணமாகவே உயிரிழப்பதாகவும், மகப்பேறு தருணத்தில் போதிய கவனிப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் யூனிசெஃப் தகவல் தெரிவிக்கிறது.
இந்தப் பிரச்சினையில் ஆசியப் பகுதிகளைப் பொருத்தவரை ஓரளவு முன்னேற்றம் இருந்த போதிலும், உலக அளவில் மகப்பேறு கால உயிரிழப்புகள் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அரசியல் ரீதியான தீர்வு காணப்படாததும், நிதி ஆதாரங்களின் பற்றாக்குறையாலுமே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
2005-ஆம் ஆண்டில் 5 லட்சத்து 36 ஆயிரம் பெண்கள் மகப்பேறு காலத்தில் உயிரிழந்திருப்பதாகவும், இவர்களில் 99 விழுக்காட்டினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆப்பிரிக்காவின் வறண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
வளரும் நாடுகளில் சுமார் 5 கோடி குழந்தைகள் பிறப்பு இருப்பதாகவும், இவற்றில் 10ல் 4 பிறப்புகள் தகுதியான, மருத்துவர்களின் துணையின்றியே நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ள யுனிசெஃப் அறிக்கை, உயிரிழந்தவர்கள் அனைவரும் ரத்தப்போக்கினாலேயே மரணம் அடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.
தவிர கடந்த 2007ஆம் ஆண்டில் 5வது பிறந்த நாளைக் காணும் முன்னரே மரணமடையும் குழந்தைகள் எண்ணிக்கை 90 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணங்களிலும் வளர்ந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளதாக யூனிசெஃப் அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகப்பேறின்போது 5 லட்சம் பெண்கள் மரணம்
» மகப்பேறின்போது 5 லட்சம் பெண்கள் மரணம்
» பிரசவத்தின் போது பெண்கள் மரணம் இந்தியா முதலிடம்!
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்
» சிம்பு 5 லட்சம் தனுஷ் 8 லட்சம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum