மாம்பழமாம் மாம்பழம்
Page 1 of 1
மாம்பழமாம் மாம்பழம்
மாம்பழ விற்பனை துவங்கி படு ஜோராக நடந்து வருகிறது.
எங்கு பார்த்தாலும் மஞ்ஞை மஞ்சேலென காட்சி அளிக்கிறது மாம்பழங்கள்.
தெருவோரக் கடைகளிலும் சரி, நடைபாதைக் கடைகளிலும் சரி தற்போது அதிகம்
வியாபாரமாவது மாம்பழம்தான்.
குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி குறிப்பாக பெண்கள் மாம்பழத்தை வாங்கி அதிகளவில் சாப்பிடும் நேரம் இது. பலரது
வீடுகளில் சாப்பாட்டுக்கு பதார்த்தமாகவே இந்த மாம்பழத்தை
வைத்துக் கொள்வார்கள். பள்ளி திறக்கட்டும், பாதி மாணவர்களது
உணவு டப்பாக்களில் மாம்பழம் நிச்சயம் இடம்பெற்று விடும்.
மாம்பழத்தை
வெறுப்பவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதிகமாக சாப்பிட
விரும்பாதவர்கள் என்று வேண்டுமானால் இருப்பார்கள். அவர்களும், இதுவரை
சுவையான மாம்பழத்தை சுவைத்ததில்லை என்றுதான் கூற வேண்டும். சுவையான
மாம்பழத்தை சுவைத்தவர்கள் யாரேனும் மாம்பழம் வேண்டாம் என்று கூறுவார்களா?
அப்படியே அவர்கள் கூறினால் அவர்களுக்கு ஒன்று நீரிழிவு நோய் அல்லது மஞ்சள் காமாலை இருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரி இந்த கதையெல்லாம் எதற்கு
இந்த மாம்பழத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே என்ன சொல்வீர்கள்.
ஆம்,
அதற்குத்தான் இந்த கட்டுரை. அதாவது மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி
சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம்,
பொட்டாசியம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த வைட்டமின்கள் மற்றும் சத்துகள் நமக்கு எளிதில் கிடைத்துவிடும்.
மாம்பழத்தை
சாப்பிடுபவர்கள், அதன் தோல் பகுதியை பெரும்பாலும் நீக்கிவிட்டு
சாப்பிடுகிறார்கள். இது பெரும் தவறு. ஏன் என்றால் மாம்பழத்தின் தோல்
பகுதியில்தான் அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. மாம்பழத்தை
சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சியம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் காணப்படுகின்றன.
பொதுவாக
மாம்பழ வரத்து ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாத இறுதி வரை நீடிக்கும்.
உலகில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் இருந்தாலும் இந்தியாவில்
குறிப்பிட்ட சில ரக மாம்பழங்கள் மட்டுமே விளைகிறது. இவற்றில் இமாம்பசந்த்,
அல்போன்சா, பங்கனப்பள்ளி, பீத்தர், செந்தூரா, ராஸ்புரி, நீலம், ஒட்டு,
மல்கோவா, கிளிமூக்கு உள்ளிட்ட சில ரகங்கள் முக்கியமானவை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum