தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீன் போண்டா

Go down

மீன் போண்டா                  Empty மீன் போண்டா

Post  ishwarya Tue Feb 26, 2013 1:47 pm

* முள் இல்லாத மீன் துண்டு - 1/2 கிலோ
* உருளைகிழங்கு - 1 (பெரியது)
* கடலைமாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கார்ன் ஃப்ளார் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 2
* நல்லமிளகு - 1 டீஸ் ஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்தது)
* கொத்தமல்லித்தழை - 1/2 கோப்பை (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சைபழம் - 1/2 மூடி
* உப்பு - தேவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு



* உருளைக்கிழங்கை நன்றாக கழுவி வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
* மீனையும் நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும், அடுப்பில் ஒரு பாத்திரத்தில் குறைவான தண்ணீர் வைத்து அது நன்றாக கொதிக்கும் வேளையில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் மீனை போட்டு வேகவைக்கவும்.
* மீன் வெந்ததும் மீனின் தோலுரித்து அதையும் மசித்துக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை சூடாக்கி அதில் கடலைமாவு, கார்ன் ஃப்ளார் மாவு இரண்டையும் போட்டு நன்றாக கட்டித்தட்டாமல் கலக்கவும்.
* அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, மசித்த மீன், தேவையான அளவு உப்பு, நல்லமிளகுத்தூள், முட்டை உடைத்து ஊற்றி கொத்தமல்லித்தழையும் சேர்த்து நன்றாக
* கட்டியாக ஒரு கரண்டியின் உதவியாலே கலக்கி வைக்கவும்.தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் சேர்த்துக்கொள்ளவும்.
* அடுப்பில் வாணலி வைத்து அதில் தேவையான எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மீன் கலவையில் ஒரு கரண்டி எடுத்து எண்ணெயில் போட்டு நன்றாக சிவக்க
* பொரிந்ததும் எடுக்கவும்.
* மீன் போண்டா தாயார். டோமேட்டோ சாஸுடன் பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum