தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்

Go down

மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்  Empty மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்

Post  meenu on Tue Feb 26, 2013 1:31 pm

மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்  Img1091012028_1_1

webdunia photoWD மு‌ன்பெ‌ல்லா‌ம் கா‌ல் வ‌லி, மு‌ட்டி வ‌லி எ‌ன்று பெ‌ரியவ‌ர்க‌ள் தா‌ன் புல‌ம்புவா‌ர்க‌ள். ஆனா‌ல் த‌ற்போதெ‌ல்லா‌ம் 30 வயதை‌க் கட‌ந்து‌வி‌ட்டாலே அனுபவ‌த்தை‌ ‌விட இதுபோ‌ன்ற வ‌லிக‌ள்தா‌ன் அ‌திக‌ம் வரு‌கி‌ன்றன.

இ‌‌ப்போ‌திரு‌க்கு‌ம் உணவு முறை, உட‌ல் எடை போ‌ன்றவ‌ற்றா‌ல் இளைஞ‌ர்களு‌க்கு‌க் கூட மூ‌ட்டு வ‌லி வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் கூறு‌கி‌ன்றன.

பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு மூ‌ட்டு வ‌லி வருவத‌ற்கு உடல்
எடை அதிகமாக இருப்பதே முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு,
நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளம்
வயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.

மூ‌ட்டு வ‌லி வ‌ந்த ‌பிறகு அத‌ற்கு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வராம‌ல் தடு‌க்க மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌ப்பதே ‌சிற‌ந்தது.

உ‌ண்மை‌யிலேயே மூ‌ட்டு வ‌லியா?

மு‌ட்டி வ‌லி‌த்தாலே அது மூ‌ட்டு வ‌லி எ‌ன்று‌ ‌நினை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம்.

மூட்டுகளில்
கடுமையான வலியு‌ம் வீக்கமும் காணப்படும். மூட்டுகள் உஷ்ணமாக இருக்கும்.
மூ‌ட்டு வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடல் சோ‌ர்வு அசதி, கா‌ய்‌ச்ச‌ல் போன்ற
அறிகுறிகளு‌ம் காணப்படும்.


மூ‌ட்டு
வ‌லிகளு‌க்கு உடனடியாக ‌‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌வ்வாறு
இ‌ல்லையெ‌னி‌ல் மூ‌ட்டு வ‌லி ‌தீ‌விரமடையு‌ம். ‌பிறகு கா‌ல்களை ‌நீ‌ட்ட‌க்
கூட முடியாத ‌நிலை ஏ‌ற்படலாம்.


மூ‌ட்டு
வ‌லி ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், நமது அ‌ன்றாட பழ‌க்க
வழ‌க்க‌ங்களை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டாலே‌ப் போ‌து‌ம். அதாவது, நன்கு நேராக
நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். இ‌ந்த தவறை‌த்தா‌ன்
பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் செ‌‌ய்‌கிறா‌ர்க‌ள். அதாவது, கூ‌ன் போ‌ட்டபடி
அம‌ர்‌வதாலேயே பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு மூ‌ட்டுக‌ள் பல‌மிழ‌க்‌கி‌ன்றன.


நிற்கும்பொழுது
பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை
சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி
உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.


கு‌திகா‌ல் செரு‌ப்புகளை‌ப் பய‌ன்படு‌த்துவதை‌ பெ‌ண்க‌ள் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நடக்கும்
போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த
வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணிகளை மாற்ற வேண்டும்.


எந்த
வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு
தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே வேலை
செய்யலாம். அ‌திக நேர‌ம் உ‌ட்கா‌ர்‌ந்தபடி ப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ள்,
அ‌வ்வ‌ப்போது எழு‌ந்து காலார நட‌ந்து‌வி‌ட்டு வ‌ந்து உ‌ட்கா‌ர்‌ந்து
வேலைகளை‌ச் செ‌ய்யலா‌ம்.


பெ‌ண்க‌ள்
எ‌ந்த‌ப் பொருளையு‌ம் கு‌னி‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌ந்து தூ‌க்க‌க் கூடாது.
காலை மட‌க்‌கி உ‌ட்கா‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் பொருளை‌த் தூ‌‌க்க
வே‌ண்டு‌ம். தரை‌யி‌ல் உ‌ட்கா‌ர்‌ந்து வேலை செ‌ய்பவ‌ர்க‌ள், தா‌ங்க‌ள்
அமரும‌் இரு‌க்கையை ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள
வே‌ண்டியது அவ‌சிய‌ம்.


மூ‌ட்டு வ‌லி வ‌ந்தவ‌ர்க‌ள்..

வலியின்
தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக்
கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க
வேண்டும்.


நிம்மதியான
தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது
மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல்
உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது வலியை நன்கு குறைக்கும்.


அசைவ
உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம்.
உப்பைக் குறைத்துக் கொள்வது ‌மிகவு‌ம் நல்லது.


மூ‌ட்டு
வ‌லி உடையவ‌ர்க‌ள் செ‌ய்ய வே‌ண்டிய உடற்பயிற்சிகளை செ‌ய்யலா‌ம்.
உட‌ற்ப‌யி‌ற்‌சிக‌ள் தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை
மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.


கார‌ட்,
‌பீ‌ட்ரூ‌ட் போ‌ன்ற கா‌ய்களை ப‌ச்சையாக சா‌ப்‌பிடலா‌ம், ‌சூ‌ப்
செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வாழை‌ப் பழ‌ங்களை அ‌திகமாக உ‌ண்ணு‌ங்க‌ள்.


கா‌பி, டீ போ‌ன்றவ‌ற்றையு‌ம், பொ‌ரி‌த்த உணவுகளையு‌ம் த‌வி‌ர்‌த்து‌விடுவது ந‌ல்லது.

நடை‌ப்ப‌‌யி‌ற்‌சி, உட‌ற்ப‌யி‌ற்‌சி எதுவாக இரு‌ந்தாலு‌ம் அளவோடு இரு‌க்க வே‌ண்டு‌ம்.

வலியை
மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டும். மனதை
எ‌ப்போது‌ம் லேசாக வை‌த்து‌க் கொ‌ள்வது‌‌ம் அவ‌சிய‌ம். வலியைப் பற்றியே
நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பது‌ம் ந‌ல்லத‌ல்ல‌.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum