அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
Page 1 of 1

அயோடின் சத்து குறைபாட்டால் வளரும் நாடுகளில் உள்ள 3.8 கோடி பேருக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று யூனிசெப் திட்ட இயக்குநர் ஆலன் கோர்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் நோய்களைமுன்கூட்டியே தடுக்க எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகள் குறித்து, நியுயார்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் அயோடின் குறைப்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வரும் சுகாதார அலுவலர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். உலகில் தற்போது உள்ள குடும்பங்களில் 70 விழுக்காட்டினர் அயோடின் உப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2002 -ம் ஆண்டில் இருந்து 100 விழுக்காடு குடும்பங்களும் அயோடின் உப்பை பயன்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் சிறிது விழ்ச்சி ஏற்பட்டுள்ள தாகவும் ஆலன் கோர்ட் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 200 கோடி மக்கள் அயோடின் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், மேலும் புதிதாக பிறக்கும் 3 கோடியே 80 லட்சம் குழந்தைகள் இக்குறைபாட்டுக்கு ஆளாகும் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். அயோடின் உப்பை பெறமுடியாமல் உள்ளவர்களில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் தான் உள்ளனர். அப்படிப் பட்டவர்களுக்கு அயோடின் உப்பு கிடைக்க சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வளரும் நாடுகளில் உள்ள சுமார் 20 கோடி குழந்தைகள், வறுமை, போதிய சுகாதார வசதியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சமூக காரணிகள் பாதிக்கப்பட்டு தங்கள் வளர்ச்சியின் முழுநிலையை எட்ட இயலாமல் உள்ளனர். இதுபோன்ற காரணிகளையும் விட அதிகமாக வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளில் 20 முதல் 25 விழுக்காட்டினர் அயோடின் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலன் கோர்ட் தெரிவித்துள்ளார்.
இது குழந்தைகளின் வேகமான வளர்ச்சிக்கு, அயோடின் சத்துக் குறைப்பாட்டை எந்த அளவுக்கு விரைந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார். அயோடின் சத்துக் குறைவால் ஏற்படும் குறைபாட்டினை, குறைந்த செலவில் நிவர்த்தி செய்துவிட இயலும். நமது உணவு வகைகளில் அயோடின் கலந்த உப்பை சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றார்.
அயோடின் சத்துக் குறைபாட்டில் இருந்து ஒரு மனிதன் தன்னைதற்காத்துக் கொள்ள வாழ்க்கை முழுவதும் அவனுக்கு தேவைப்படுவது ஒரு தேக்கரண்டி அளவு அயோடின் தான். இதனை நாம் 10 சென்ட் செலவில் ஒரு ஆண்டிற்குள்ளேயே பெறமுடியும். தாயின் கர்ப்பபையில் மிகக் நுண்ணிய அளவு அயோடின் இருக்க வேண்டியது மிக அத்தியாவசியமானது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அயோடின் குறைப்பாட்டைக் அகற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, எஞ்சியுள்ள 30 விழுக்காடு குடும்பங்களுக்கும் அயோடின் உப்பு கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கோள்ளும் என்று ஆலன் கோர்ட் கூறினார். இந்த குடும்பங்கள் பெரும்பாலும் 20 நாடுகளில் தான் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு 2005 - 10 க்கு இடைப்பட்ட ஆண்டு காலத்தில் யூனிசெப் அமைப்பால்அயோடின் குறைப்பாட்டைக் தடுக்க வழங்கப்படும் நிதியுதவிகளில் அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான், அங்கோலா, போல்வியா, சீனா, எகிப்து, எத்தியோப்பியா, கானா, கெளதமாலா, ஹெயிட்டி, இந்தோனேஷியா, நைஜூரியா,பிலிப்பைன்ஸ், ரஸ்யா, செனிகல், சுடான், உக்ரைன்,வியட்நாம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
» 22 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் அபாயம்
» இளநரைக்கு இலந்தை மருத்துவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum