தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வறுத்த குழம்பு

Go down

 வறுத்த குழம்பு                             Empty வறுத்த குழம்பு

Post  ishwarya Tue Feb 26, 2013 11:44 am

துவரம்பருப்பு&1/2 கப்
* பீர்க்கங்காய்&1
* சின்னவெங்காயம்&7
* தக்காளி&1
* மஞ்சள்தூள்&சிறிது
* உப்பு&தேவைக்கு

வறுத்து அரைக்க:
* காய்ந்த மிளகாய்&4
* உளுந்து&ஒரு டீஸ்பூன்
* சீரகம்&ஒரு டீஸ்பூன்
* தேங்காய்ப் பூ&ஒரு டேபிள்ஸ்பூன்

* எண்ணெய்
* கடுகு
* உளுந்து
* சீரகம்
* பெருங்காயம்
* கறிவேப்பிலை
* துவரம்பருப்பை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்.வெறும் வாணலியை அடுப்பில் ஏற்றி மிதமானத் தீயில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். மிளகாய் கருகாமல் இருக்க வேண்டும்.

* இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்.பீர்க்கங்காயை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்.பீர்க்கங்காயை நறுக்கும்போது சுவைத்துப் பார்க்க வேண்டும்.நன்றாக இருந்தால் மட்டுமே குழம்பில் சேர்க்க வேண்டும்.

* ஏனெனில் சில காய்கள் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.அது குழம்பையே கெடுத்துவிடும்.வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்.குழம்பு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கு.

* அடுத்து தக்காளி சேர்த்து வதக்கு.இவை வதங்கியதும் பீர்க்கங்காய் சேர்த்து வதக்கு.எல்லாம் வதங்கியதும் வறுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து சிறிது வதக்கி பருப்பைக் கரைத்து ஊற்று.

* தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்.இக்குழம்பு சாம்பாரைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும்.இப்போது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி போட்டு காய் வேகும்வரை கொதிக்கவிடு.காய் வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும்.

* இது சாதம்,இட்லி,தோசை,வெண்பொங்கல்,சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum