முட்டை மசாலா ப்ரெட்
Page 1 of 1
முட்டை மசாலா ப்ரெட்
முட்டை : 2
வெங்காயம் : 2
ப.மிளகாய் : 1
தாளிக்க எண்ணெய் : ஒரு டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை : சிறிது
உப்பு : ஒரு சிட்டிகை
ம.தூள் : ஒரு சிட்டிகை
ப்ரெட் : 8 துண்டுகள்
நெய் : 2 டீஸ்பூன்
வெள்ளரி : 1
தக்காளி : 1
வெங்காயம், ப.மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு கலக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும்.
வெள்ளரியை தோல்சீவி வளையங்களாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை மெல்லிய ஸ்லைசுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியைக் காயவைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காயந்ததும் கடுகு, க.இலை போட்டு தாளித்து வெங்காயம், ப.மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
அதை கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையில் சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.
அடுப்பில் தோசைக் கல்லைக் காய வைத்து சிறு சிறு அடைகளாக முட்டையை ஊற்றி திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். இந்தக் கலவையை 4 அல்லது 5 அடைகள் ஊற்றலாம். உள்ளங்கையளவு வருமாறு பார்த்துக் கொள்ளவும்.
ப்ரெட் துண்டங்களை இரண்டிரண்டாக கல்லில் போட்டு சுற்றிலும் லேசாக நெய்விட்டு அதிகம் முறுகிவிடாமல் இளம் பதத்தில் ரோஸ்ட் செய்து எடுக்கவும்.இரண்டு ரோஸ்ட் செய்த ப்ரட் துண்டுகளின் நடுவில் ஒரு முட்டை அடை வைத்து முட்டைக்கு முன்னும் பின்னும் ஒரு வெள்ளரி, ஒரு தக்காளி ஸ்லைஸ் வைத்துக் கொடுங்கள்.
1 பீஸ் ப்ரட் முட்டை மசாலா உண்டு, ஹெல்த் ட்ரிங்க் ஏதாவது குடித்து விட்டால் அப்புறம் குழந்தைகளின் தெம்பிற்கு கேட்கவே வேண்டாம். உற்சாகமாய் செயல்படுவார்கள்.
டிப்ஸ்
சில பலகாரங்கள் செய்யும் போது ஓமம் தேவைப்படும். ஓமத்தை பொடி செய்யும் போது 1 ஸ்பூன் கடலை மாவை சேர்த்து அரைத்தால் ஓமம் நன்றாகப் பொடி ஆகிவிடும்.மோர் மீதமாகிவிட்டால் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு போட்டு வைக்க புளிக்காமல் மறுநாள் சாப்பிட சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முட்டை மசாலா
» முட்டை மசாலா ஆப்பம்
» மிளகு முட்டை வறுவல் மசாலா
» மிளகு முட்டை வறுவல் மசாலா
» சமையல்:முட்டை உருளை மசாலா
» முட்டை மசாலா ஆப்பம்
» மிளகு முட்டை வறுவல் மசாலா
» மிளகு முட்டை வறுவல் மசாலா
» சமையல்:முட்டை உருளை மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum