தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலர்புல் செருப்பு

Go down

கலர்புல் செருப்பு                Empty கலர்புல் செருப்பு

Post  ishwarya Mon Feb 25, 2013 11:49 am

காலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத் திற்கான அவசியமாக மாறிவருகின்றன. காலுக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற் காக வாங்கப்பட்ட காலணிகள் காலமாற்றத் தில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் மாறியதில் ஆச்சரியமில்லை என்றாலும், ஆடைக்கும், அணிகலன்களுக்கும் கொடுக்கும் அதே முக் கியத்துவத்தை செருப்புக்கும் கொடுத்து வாங்கி அணிந்து மகிழ்கின்றனர் இன் றைய தலைமுறையினர்.

அதனால்தான் ஆடை, அணிகலன்க ளுக்கு நிகராக காலணிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இப்போதெல் லாம் பல ஆயிரம் ரூபாய் வரை செருப் புகள் விற்கப்படுகின்றன.

கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்ற னர். ஆனால் செருப்பு என்பது நமது உள் ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடை யதால் அதை வயசுக்கு தக்க படியும், தேவைக்கு தக்கபடியும் வாங்குவது முக் கியமானது. ஏனென்றால் உள்ளங்காலு டன் நமது உட லில் உள்ள அனைத்து நரம்புகளும் தொடர்புடையது.

இப்போது திருமணம் போன்ற விசே ஷங்களுக்கும், வீடு, சுற்றுலா போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான செருப்புகளை பெண்கள் அணிகின்றனர். உடலுக்கு தகுந்தபடி செருப்புகளை வாங் குவது நல்லது. பொருத்தமான செருப்பு களை அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பொருத்தமில்லாத செருப்புகளை அணிந்தால் தன்னம்பிக்கை குறையும்.

செருப்புகளை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மூன்று விஷயங்களை கவனித்து வாங் குவது நல்லது. அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை. கண்ணைப் பறிக்கும் கலர் களை விட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப் பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்பு கின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளா கின்றன. மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத் தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினை களை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். இன்றைய பேஷன் விரும்பிகள் அனைவருமே குதிகால் உயர்ந்த செருப்புகளையே அணிகின்றனர். இதன் காரணமாக உடலின் சமன்நிலை பாதிப்பு அடைகிறது. இதனால் முதுகுவலி, குதிகால் வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ்' என்ற குதிகால் செருப்புகளை தவிர்க் கவும். குண்டு உடல்வாகு உடையவர்கள் அதிக எடையுள்ள செருப்புகளை அணிய வேண்டாம். இவர்கள் மென்மையான திறந்த வெளி செருப்புகளை அணிவது நல்லது.

பாதம் நீளமாக உள்ளவர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புகளை வாங்கும்போது. அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல் லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணி யவும்.

பெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப் புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை கவனித்து வாங்குவது நல்லது. .......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum