தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலர் கலராய் கைப்பைகள்:

Go down

கலர் கலராய் கைப்பைகள்:  Empty கலர் கலராய் கைப்பைகள்:

Post  ishwarya Sat Feb 23, 2013 5:49 pm

பொருட்களை எல்லாம் வைப்பதற்கு கைப்பைகளை கொண்டு செல்வது வழக்கம். கைப்பைகள் கூட வண்ணங்களாக மிளிர வேண்டும் என்பதே எல்லோர் எண்ணமும். வண்ண வண்ண கைப்பைகள் வாங்குவதற்கு கடைகளை தேடுபவர்கள் அதிகம். கடைகள் இருந்தாலும் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்வதில் குழப்பம் எற்படலாம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்யவே உங்களுக்கு ஒரு குறிப்பு.

*கைப்பை வாங்க செல்பவர்களாக இருந்தால் முதலில் நீங்கள் என்ன நிறத்தில் கைப்பையை வாங்கப்போகிறீர்கள் என்று வீட்டிலேயே தீர்மானித்து கொண்டு கடைக்குச் செல்லவேண்டும்

*கடையில் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்யும் போது அது விலைக்கேற்ற தரமுடையதாக உள்ளதா என பார்க்கவேண்டும்.

* நீங்கள் தெரிவு செய்யும் கைப்பைகள் பொதுவான நிறமுடையதா என பார்க்கவேண்டும்.

*கைப்பைகளை வாங்கும்போது எப்போதும் கண்கவர் வண்ணங்களிலேயே தெரிவு செய்யவேண்டும். *கைப்பைக்குள் சிறிய சிறிய மடிப்புக்கள் உள்ளனவா என பார்க்கவேண்டும்.

*கைப்பையின் வார்கள் பொதுவாக சிறிதாக இருத்தல் வேண்டும்.

*கைப்பையை மூடும் இடம் எப்பொழுதும் சிப் உள்ளதாக இருக்க வேண்டும்.

*கைப்பைகளை வாங்கும்போது நீளம் சிறியதாகவும் அகலம் சற்று பெரியதாகவும் இருக்கவேண்டும். எப்போதும் கையில் அணிந்து கொண்டு செல்லும் போது கையின் நடுப்பகுதியில் சரிசமமானஅளவில் இருபக்கமும் கைப்பை தெரியவேண்டும்.

என்ன இனி அழகான கைப்பைகளை வாங்கி அசத்த போறீங்களா!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum