பாதங்களின் அழகு முகத்தில் தெரியும்
Page 1 of 1
பாதங்களின் அழகு முகத்தில் தெரியும்
*அழகான பாதங்களை, மேலும் அழகாக காட்டுவது காலணிகள். இதில் பல வகை உள்ளன. பிளாட், ஹீல்ஸ், ஹைஹீல்ஸ், பாய்ன்டெட் ஹீல்ஸ் மற்றும் பான்சி காலணிகள். காலணிகள்
*எதுவாக இருந்தாலும் அதை நமக்கு ஏற்ப வாங்கி அணியவேண்டும். இல்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார் பிசியோதெரபிஸ்ட் லில்லி ஜெயா ஷீலா.
‘‘நம் உடலின் மொத்த எடையையும் கால்கள்தான் தாங்குகின்றன. அதில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் முழு உடலமைப்பை பாதிக்கும். இதற்கும் காலணிக்கும் என்ன சம்பந்தம்... என்று
*கேட்கலாம். நாம் அணியும் காலணிகள்தான் நம் உடலின் மொத்த அமைப்பையும் மாற்றுகிறது என்று பலருக்கு தெரிவதில்லை.
*நம் கால்கள் தரையில் சமமாக இருக்க வேண்டும். இதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும் உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் பல மாற்றங்களை சந்திக்கிறது. சாதாரண காலணிகள்
*அணிவதால் நம் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், ஹைஹீல்ஸ் மற்றும் பாய்ன்டெட் ஹீல்ஸ் அணியும் போது நம் உடலின் சமநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. காரணம்,
*ஹீல்ஸ் அணியும் போது குதிக்கால்கள் மேலே எழும்பி இருக்கும். இதனால் பின்புறம் சற்று மேல் தூக்கி இருக்கும். அதை சமாளிக்க நம்மை அறியாமல் நாம் முன்னால் குனிவோம்.
*இதனால் பின்புறம் மற்றும் மார்பக பகுதியில் மாற்றம் ஏற்படும்.
*ஹைஹீல்ஸ் காலணிகள் அணிவதால், பல பிரச்னைகள் ஏற்படும். அதில் முக்கியமானது கால் முட்டிகளில் அழுத்தம். விளைவு மூட்டுவலி மற்றும் தேய்மானம். இந்தப் பிரச்னைக்கு
*ஆஸ்டியோ ஆர்த்ரடிஸ் என்று பெயர். கால் விரல்களில் ஏற்படும் அழுத்தத்தால் மார்டான்நியுரோமா பிரச்னை ஏற்படும். குதிக்கால் ஹீல்ஸ் அணிவதால், உடம்பின் மொத்த எடை கால்
*விரல்களில் விழும். இதனால் அங்குள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு வீக்கம் ஏற்படும்.
*மெட்டாடார் சால்ஜியா, கால்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக விரல்களில் கோணலாக வளரும். ஹாலென் டீபார்மிட்டி, கணுக்கால் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு இறுக்கமாகும்.
*இதனால் அங்குள்ள தசைகளில் வளர்ச்சி ஏற்படாது. கால் முட்டிகள் வளைந்து காணப் படும், கால் பாதங்களில் ஆணிகள் தோன்றும். இவையெல்லாம் காலில் ஹைஹீல்ஸ் அணிவதால் பிரச்னைகள் ஏற்படும்
*இதையெல்லாம் விட, நம் உடலை நேராக தாங்கிப் பிடிக்கும் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
*பிரச்னைகளில் இருந்தும் விடுபட ஒரே தீர்வு பெரிய ஹீல்ஸ் உள்ள காலணிகளை தவிர்த்து விட்டு சாதாரண மிருதுவான காலணிகள் அணிவதுதாம். அதே சமயம் ஹீல்ஸ் கொண்ட
*காலணிகளை அணிய விரும்பினால், கல்யாணம் மற்றும் பார்ட்டிகளுக்கு மட்டும் அணிந்து செல்லலாம்’’
*இப்போது பெரும்பாலான வீடுகளில் டைல்ஸ் மற்றும் மார்பில் தரைகளை பயன்படுத்துகிறார்கள். இதில் ஈரத்தன்மை அதிகம் என்பதால், வீட்டில் நடக்கும் போது கால்களில்
செருப்பு அணிந்து கொள்ளலாம்.
*அக்குபஞ்சர் செருப்புகள், கால் பாதங்களுக்கு மசாஜ் கொடுக்கும்.
*உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில் இணைகின்றன; அல்லது பாதங்கள் வழியாக செல்கின்றன. எனவே, பீச் மணல் மற்றும் கூழாங்கல்லில் வெறும் காலில்
நடக்கும்போது நரம்புகள் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும்.
*உடல் எடையை குறைக்க தினமும் நடைப்பயிற்சி செய்பவர்கள் சாதாரண கான்வாஸ் ஷு அல்லது எடை குறைவான ஷுக்களை அணியலாம். வெறும் கால்களிலோ அல்லது
செருப்பு அணிந்து கொண்டோ நடைப்பயிற்சி செய்யக்கூடாது.
*அதிக நேரம் நின்றுக் கொண்டு வேலை பார்ப்பவர்கள் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிது நேரம் அமர்ந்து விட்டு வேலையை தொடரலாம்.
*கர்ப்பிணிகள் ஹைஹீல்ஸ் காலணிகள் ஒருபோதும் அணியக் கூடாது.
*கால் பாதங்களில் வலி இருந்தால், கால்களை நீட்டி பாதங்களை இடது மற்றும் வலது புறமாக சுழற்றலாம். மேலும் கீழுமாக அசைக்கலாம். இதனால் கால் மற்றும் கால் விரல்களில் உள்ள வலிகள் குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
» கால்களின் அழகு மீன்களுக்கு தெரியும்
» அகத்தின் அழகு, நகத்திலும் தெரியும்!
» வீட்டிலிருந்தே பாதங்களின் அழகை பேணலாம் ...
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum