அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
Page 1 of 1
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.
இந்த பழமொழியில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன.
முகம் அழகாக தோன்ற வேண்டுமானால் உடலில் உள்ளே உள்ள உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், பொருள் இதன் பட்டியலில் அழகும் இடம்பிடித்து விட்டது.
எனவே உடலை நன்கு பராமரித்தால்தான் இயற்கையான உண்மையான அழகைப் பெறமுடியும்.
இன்றைய நவீன உலகில் உணவு மாறுபாடு காரணமாக முகமும், சருமமும் பாதித்த நிலையிலேயே பலர் காணப்படுகின்றனர். இவர்களின் இந்த நிலையைப் பயன்படுத்தி பணம் குவிக்க பல அழகு நிலையங்கள் ஆங்காங்கே புதிது புதிதாய் முளைக்க ஆரம்பித்துவிட்டன.
முக அழகை பராமரிக்க மேலை நாட்டினர் இரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை மேல்பூச்சாக பூசி வந்தனர்.
நாளடைவில் மேலை நாட்டினரும் இயற்கையை நேசித்து, அதன் அருமையை புரிந்துகொண்ட இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி, இயற்கையான உணவுகளை சாப்பிட்டு இயற்கையாக உடல் அழகையும் முக அழகையும் பெற ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் நம் மக்கள் பலர் மேல்நாட்டு மோகத்தால் ரசாயன அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர்.
பொதுவாக சருமத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. சாதாரண சருமம்
2. வறட்சியான சருமம்
3. எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமம்
வறட்சியான சருமம்
வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் மிகவும் கறுத்து களையிழந்து காணப்படும். இதற்குக் காரணம் இவர்களின் உணவு முறையே. வறட்சியான சருமம் கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். இவர்கள் உணவில் அதிகம் புளி, தக்காளி போன்ற புளிப்புச் சுவையை விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.
வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் பளபளக்க சில வழிமுறைகள் இதோ...
வெண்டைக்காய் பிஞ்சு - 2
காரட் - 1
இவற்றை எடுத்து நறுக்கி தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் எங்கும் பூசி சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் வறண்ட சருமம் ஒளிபெறும்.
· செம்பருத்தி இலை, பயித்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.
· அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும்பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.
· வறட்சியான சருமம் கொண்டவர்கள் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
· சருமத்தை வறட்சியுறச் செய்யும் குளியல் சோப்புகளைத் தவிர்ப்பது நல்லது.
· பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை உணவில் மிதமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும் .
· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
வெண்டைகாய் - 150 கிராம்
சிறுபயறு - 30 கிராம்
துத்தியிலை - 10 கிராம்
ஆவாரம் பூ - 1 கைப்பிடி
மிளகு - 5
சீரகம் - 5 கிராம்
பூண்டு - 2 பல்
பெருங்காயம் - தேவையான அளவு
இவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த சாறினை வடிகட்டி அருந்தி வந்தால் வறட்சியான உடல் குளிர்ச்சியடைந்து பளபளப்பாகும். தொடர்ந்து ஒரு மண்டலம் இவ்வாறு செய்து வருவது நல்லது.
எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமம்
சிலருடைய முகம் எப்போதும் எண்ணெய் பசையுடனே காணப்படும். மேலும் அவர்கள் எவ்வளவுதான் முகத்தை கழுவினாலும் எண்ணெய் வடிவது போன்றே இருக்கும். இதற்கு காரணம் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பதே. இவர்கள்...
· தக்காளிச் சாற்றினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும்.
· வெள்ளரிக்காயை எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் காயவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
· சின்ன வெங்காயத்தை நன்கு வேகவைத்து தயிர் கலந்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகம் பளபளக்கும்.
ஆரஞ்சு ஜூஸ் - 100 மிலி
எலுமிச்சை ஜூஸ் - 100 மிலி
நெல்லிச்சாறு - 100 மிலி
புதினா சாறு - 100 மிலி
சாத்துகுடி சாறு - 100 மிலி
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அதனுடன் 300 மிலி தேனை சேர்த்து பதமாகக் காய்ச்சி இறக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை இருவேளையும் 200 மிலி தண்ணீரில் 15 மிலி அளவு கலந்து அருந்தி வந்தால் முகம் மற்றும் உடல் பளபளக்கும்.!
பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.
நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.
ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.
அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.
இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.
மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.
இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.
ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அகத்தின் அழகு, நகத்திலும் தெரியும்!
» பாதங்களின் அழகு முகத்தில் தெரியும்
» கால்களின் அழகு மீன்களுக்கு தெரியும்
» அகத்தின் அழகை பிரதிபலிக்கும் நகம்
» முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum