குண்டுப் பெண்களுக்கான காட்டன் புடவை
Page 1 of 1
குண்டுப் பெண்களுக்கான காட்டன் புடவை
*காட்டன் சேலையும், உடைகளும் நம்மூரைப்பொறுத்தவரை ஒல்லியானவர்களுக்கும், ஆசிரியர் வேலையில் இருப்போருக்குமான அடையாளம்!மற்ற எந்த உடைகளுக்கும் இல்லாத அழகு காட்டனுக்கு உண்டு எப்போதும். ஆனாலும் எல்லாரும் அதை உடுத்தத் தயங்குவதற்கான காரணம்தான் முதல் வரியில்.
*அந்தக் கருத்தை உடைக்கிறது மாதவி சொல்கிற காட்டன் தகவல்கள். 12 வருடங்களுக்கும் மேலாக காட்டன் பிசினஸில் இருக்கிறார் இவர்.‘‘பூர்வீகம் ஆந்திரா. அந்த மாநிலம் காட்டன் உடைகளுக்குப் பெயர் போனது. நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்தே உடைகள்ல என்னோட சாய்ஸ் காட்டன்தான். காட்டன்ல இப்படியெல்லாம் கூட டிசைன் பண்ண முடியுமாங்கிற அளவுக்கு, விதம் விதமா காட்டன் கட்டுவேன்.
*தென்னிந்தியாவோட வெயிலுக்கு, குறிப்பா தமிழ்நாட்டு வெயிலுக்கு காட்டன்தான் பெஸ்ட். ஆனாலும் காட்டன் டிரெஸ்னா கஞ்சி போடணும், இஸ்திரி பண்ணணும், சாயம் போயிடும், வயசான மாதிரிக் காட்டும், குண்டா காட்டும்னு ஏகப்பட்ட தப்பான அபிப்ராயங்கள் பெண்களுக்கு இருக்கிறதால, ரொம்ப சிலர்தான் காட்டன் கட்டறாங்க.
*காட்டன்ல உள்ள வெரைட்டியையும், டிசைன்களையும் கேள்விப்படறவங்க, இனிமே காட்டனை தவிர வேற மெட்டீரியல் பக்கம் திரும்ப மாட்டாங்க..’’ என்கிற மாதவி, அப்படி சிலதைப் பட்டியலிடுகிறார்.‘‘பிளாக் பிரின்ட் செய்த காட்டன்ல புடவையும், சல்வாரும் கிடைக்குது. இதைப் போட்டீங்கன்னா கவுரவமான ஒரு தோற்றம் வரும். உடுத்தினதே தெரியக் கூடாது, சாஃப்ட்டா இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு கலம்காரி பெஸ்ட்.
*காட்டனா இருக்கணும், அதே சமயம் மொடமொடப்பா இருக்கக் கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நாராயண்பேட் காட்டனும், பேட்டேரு காட்டனும், பொபிலி காட்டனும் சரியான சாய்ஸ். வயசானவங்களுக்கு ஜரிகை வச்ச வெங்கடகிரி காட்டன். சிம்பிளா இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு கத்வால் காட்டன். சின்னப் பொண்ணுங்களுக்கு சூப்பர்நெட்டும், தனேகலியும்... இன்னும் இப்படி சொல்லிட்டே போகலாம்.
*காலேஜுக்கும், வேலைக்கும் கட்டிட்டுப் போற மாதிரி சிம்பிளாகவும், விசேஷங்களுக்குக் கட்டற மாதிரி ஆடம்பரமாகவும் செலக்ட் பண்ணலாம். இன்னிக்கு ஃபேஷன் ஷோல ராம்ப் வாக் பண்ற மாடல்களோட சாய்ஸ், பெரும்பாலும் காட்டன் சேலையா இருக்கிறதை கவனிச்சாலே, காட்டனோட மகத்துவம் தெரியும்’’ என்கிற மாதவி, காட்டன் விரும்பிகளுக்கு சில டிப்ஸ் தருகிறார்.
*பெரிய பொம்மை டிசைன் போட்ட காட்டன் சல்வார்தான் இப்ப காலேஜ் பொண்ணுங்க மத்தில ஃபேஷன். வேலைக்குப் போறவங்களோட சாய்ஸ் பிளாக் பிரின்ட் பண்ணின சூப்பர் நெட் சல்வாரும், சேலையும்.அதுக்கடுத்தபடியா பிளாக் பிரின்ட்டட் சல்வார். அதுக்கு காட்டன்ல ஒண்ணும், ஷிஃபான்ல ஒண்ணுமா ரெண்டு துப்பட்டா கிடைக்கும். மாத்தி, மாத்தி உபயோகிக்கலாம்.
*தரமான காட்டன் சாயம் போகாது. சுருங்காது. திக்கான மெட்டீரியலை தவிர்த்து, மெலிசான காட்டனா வாங்கினா இந்தப் பிரச்னைகள் இருக்காது.கஞ்சி போட்டா காட்டன் சேலைகளோட ஆயுளும், பளபளப்பும் அதிகரிக்கும். ஒவ்வொரு முறை உடுத்தறப்பவும் போடணும்னு அவசியமில்லை. 4 முறை உடுத்தின பிறகு ஒரு வாட்டி கஞ்சி போட்டு, இஸ்திரி பண்ணிக் கட்டலாம். இப்ப கஞ்சி போட்டுக் கொடுக்க பிரத்யேக கடைகளெல்லாம் வந்தாச்சு....
*ஜரிகையோ, எம்பிராய்டரி வேலைப்பாடோ செய்த காட்டன் உடைகளை கூடிய வரைக்கும் கைகளால துவைக்கிறது நல்லது.
புது காட்டன் புடவையை முதல் முறை துவைக்கிறப்ப, வெதுவெதுப்பான தண்ணீர்ல கொஞ்சமா கல் உப்பு சேர்த்து பத்து நிமிஷம் ஊற வச்சு அலசினா, ரொம்ப நாளைக்கு புடவையோட புது மெருகு அப்படியே இருக்கும். பூந்திக் கொட்டை சேர்த்த தண்ணீர்ல ஊற வச்சு அலசினாலும், பளபளப்பு மங்காம இருக்கும்.....

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குண்டுப் பெண்களுக்கு பொருத்தமாக ஆடை
» குண்டுப் பெண்களை அதிகம் ஆண்கள் விரும்பக் காரணம்..!

» காட்டன் குர்த்தீஸ் காட்டில் மழை
» காட்டன் டிரஸ்சில் கோடையில் கலக்குங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum