‘பல்லுல கல்லா?
Page 1 of 1
‘பல்லுல கல்லா?
‘‘பல் சுத்தமா, பளிச்னு இருந்தா மட்டும் போதாது. கூடுதல் அழகோட இருக்கணும்னு விரும்பறவங்களுக்கான லேட்டஸ்ட் விஷயம்தான் இது. பற்களை வேற எந்த முறையிலயும் அலங்கரிக்க முடியாது. பற்கள்ல ஒட்டறதுக்காகவே இப்ப பிரத்யேகமான கிளாஸ் கிரிஸ்டல் கற்கள் கிடைக்குது. ‘பல்லுல கல்லா? அப்படின்னா, பல்லை ட்ரில்லிங் பண்ணி, ஓட்டை போட்டு செய்வாங்களோ’னு நிறைய பேர் நினைக்கலாம். அப்படியெல்லாம் இல்லை. கொஞ்சமும் வலியோ, வேதனையோ இல்லாம, மயக்க மருந்து தேவையில்லாம, ரொம்ப சுலபமா பல் மேல கல் ஒட்டிடலாம்.
இந்த கிரிஸ்டல் கற்கள், பல்லுக்காகவே ஸ்பெஷலா டிசைன் செய்யப்பட்டு வருது. பார்க்கிறதுக்கு வைரக் கல் தோற்கும். அவ்வளவு
பளபளப்பா, அதே சமயம் கூர்மையான முனைகள் இல்லாததா இருக்கும்.
1 மி.மீ பருமனும், 2 மி.மீ விட்டமும் கொண்டதா இருக்கும். எல்லா கலர்கள்லயும், விதவிதமான வடிவங்கள்லயும் கிடைக்குது.
இந்தக் கல்லை, அதுக்கான ஸ்பெஷல் பசை வச்சு, பல் மேல ஒட்ட வேண்டியதுதான். அந்தப் பசை பற்களோட எனாமலை எந்த வகைலயும் பாதிக்காது. ஒரு வருஷம் வரை அப்படியே இருக்கும். இதை எப்ப வேணாலும் எடுக்கலாம். மறுபடி ஒட்டிக்கலாம். தினசரி பல் தேய்க்கறதுல எந்த சிக்கலும் இருக்காது. பற்களை முறைப்படி சுத்தப்படுத்திக்கிட்டு, அப்புறம் பல் மருத்துவர்கிட்ட இதை ஒட்டிக்கிறதுதான் பாதுகாப்பானது.
ஒருவேளை இந்தக் கல், நழுவி, சாப்பிடும் போது தொண்டை வழியா, வயிற்றுக்குள்ள போயிட்டா?& இந்தச் சந்தேகமும் நிறைய பேருக்கு உண்டு. பயப்படவே வேண்டாம். அப்படியே போனாலும், இந்தக் கல் ஒரு பிரச்னையும் பண்ணாது. இயற்கையா வெளியேறிடும்’’ என்கிற டாக்டர் யஷ்வந்த், குழந்தைகளுக்கு இந்த அழகு சிகிச்சை அறிவுறுத்தக் கூடியதில்லை என்பதை கண்டிப்பாகச் சொல்கிறார்.
& ஆர்.வைதேகி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காலேஜ் பெண்களின் புது பேஷன்! பல்லுல கல்லு!
» சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு!
» கவர்ச்சியில் கல்லா கட்டும் மோனிகா!
» ஜில்லா படத்துக்கு கல்லா கட்டுகிறார்கள்
» சிறுநீரகத்தில் கல்லா?சில பயனுள்ள ஆலோசனைகள்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum