தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பளபளக்கும் அத்தனையும் டூப்ளிகேட்!

Go down

பளபளக்கும் அத்தனையும் டூப்ளிகேட்! Empty பளபளக்கும் அத்தனையும் டூப்ளிகேட்!

Post  ishwarya Sat Feb 23, 2013 4:59 pm

செய்தி வாசிப்பாளர், சீரியல்,சினிமா நடிகைகள் என கேமராவுக்கு முன் தோன்றும் பெண்களைப் பார்த்ததும், சாமானியப் பெண்களின் கவனம் சட்டெனப் பதிவது அவர்களது நகைகள் மற்றும் உடைகளின் மீதுதான். ‘அந்தப் படத்துல அனுஷ்கா போட்டிருந்த மாதிரியே வளையல், இந்தப் படத்துல ஹன்சிகா போட்டிருந்த தோடு...’ எனத் தேடித் தேடி வாங்குபவரா நீங்கள்?

‘நடிகைகளுக்கென்ன... பணத்துக்கா பஞ்சம்? தங்கத்துலயும் வைரத்துலயும் டிசைன் டிசைனா வச்சிருப்பாங்க. நமக்கெங்க அதெல்லாம் கிடைக்கப் போகுது?’ என்றுதானே நினைக்கிறீர்கள்? தங்கம், வைரம் போலப் பளபளக்கும் அத்தனையும் டூப்ளிகேட்!

80களில் கொடிகட்டிப் பறந்த விஜய சாந்தி, அம்பிகா, ராதா முதல் இன்றைய முன்னணி நடிகைகள் அசின், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா வரை அத்தனை நடிகைகளுக்கும் படத்துக்கான காஸ்ட்யூம் நகைகளை வடிவமைப்பவர் கண்ணன். சென்னை பாண்டிபஜாரில் உள்ள இவரது ‘ஆர்.கே. ஜுவல்லர்’ஸில் எந்த நேரமும், ஏதோ ஒரு பிரபலத்துக்காக நகைகள் தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

‘‘25 வருஷங்களுக்கு முன்னாடி கடை ஆரம்பிச்சேன். ‘அஷ்டலட்சுமி வைபோகம்’னு ஒரு தெலுங்குப் படம் மூலமா சினிமாவுக்குள்ள வந்தேன். அது அப்படியே தொடர்ந்து, இன்னிக்கு ‘சுறா’, ‘சிங்கம்’, ‘சிவாஜி’, ‘சந்திரமுகி’, ‘தசாவதாரம்’, ‘ஆதவன்’, ‘வேட்டைக்காரன்’, ‘கோவா’, லேட்டஸ்ட்டா வந்த ‘கும்கி’, ‘விஸ்வரூபம்’ உள்பட பல படங்களுக்குப் பண்ணிட்டேன்...’’ - எளிமையாகப் பேசுகிறார் கண்ணன்.

‘‘பட கம்பெனிலேர்ந்து வருவாங்க. ஸ்கெட்ச்சோ, போட்டோவோ கொடுத்து, அதே மாதிரி வேணும்னு கேட்பாங்க. ஹீரோ, ஹீரோயின், கொஞ்சம் வயசான கேரக்டர்ஸ், டான்சர்ஸ்னு யாருக்கு, எப்படி வேணுமோ, அப்படிப் பண்ணித் தருவேன். நாலஞ்சு கிலோ கிரீடத்தை சர்வசாதாரணமா முகம் சுளிக்காம சுமந்து நடிச்சாங்க அந்தக் காலத்து நடிகர்கள். இப்ப அப்படியில்லை...

வெயிட் அதிகமா இருக்கக் கூடாது, உறுத்தக் கூடாது, அலர்ஜி ஆகக் கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன் போடறாங்க’’ என்கிறவர், பல நிறுவனங்களின் நகை மற்றும் புடவை விளம்பரங்களில் மாடல்கள் அணிந்து வருகிற ஆடம்பர நகைகளையும் வடிவமைத்திருக்கிறார். ‘‘பொதுவா சினிமாவோ, விளம்பரமோ... ஷூட்டிங்ல யாரும் தங்க நகைகளை உபயோகிக்க மாட்டாங்க. எத்தனை பெரிய நடிகர், நடிகையானாலும் டூப்ளிகேட்தான் யூஸ் பண்ணுவாங்க. தொலைஞ்சாலும் பிரச்னையில்லை பாருங்க...

உடனே சில நூறு ரூபாய்ல அதே மாதிரி வேற புதுசா ரெடி பண்ணிடலாமில்லையா...’’ என்கிற கண்ணன், நகை விஷயத்தில் நடிகைகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் சொல்கிறார். ‘‘இந்த சீனுக்கு இப்படித்தான் வேணும்னு பார்த்துப் பார்த்து நகைகள் செலக்ட் பண்ற ஆர்வமெல்லாம் இந்தக் காலத்து நடிகைகள்கிட்ட இல்லை. அந்த விஷயத்துல சில்க் ஸ்மிதாவை என்னால மறக்க முடியாது. கவர்ச்சி நடிகையா கொடி கட்டிப் பறந்த அவங்களுக்குள்ள அப்படியோர் கலைநயத்தைப் பார்த்திருக்கேன்.

அவங்களுக்கு அடுத்து பானுப்ரியா. இப்ப சொல்லிக்கிற மாதிரி அப்படி யாரும் இல்லை. பளபளன்னு மின்னும் நகைகளை இப்ப உள்ள நடிகைகள் விரும்பறதில்லை. டல் பாலீஷ்ல, காப்பர் ஃபினிஷ்ல, கனமே இல்லாததா, அதே நேரம் ஏதோ வித்தியாசமா தெரியணும்னு விரும்பறாங்க’’ என்கிற கண்ணன் வடிவமைக்கும் டிசைன்களுக்கு குஷ்பு, ஜோதிகா, அசின் என பெரிய நட்சத்திர பட்டாளமே ரசிகைகள்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum