கோடைக் காலத்தில் சருமம் வறட்சி
Page 1 of 1
கோடைக் காலத்தில் சருமம் வறட்சி
கோடைக் காலத்தில் உடல் சருமம் வறட்சி அடைந்து அதன் காரணமாக சுருக்கங்கள் தோன்றி பார்க்க விகாரமாகி விடுவதுண்டு. அதில் முகத்தில் சருமச் சுருக்கம் தோன்றினால் அது முதுமைப் பருவத்துத் தோற்றத்தை உண்டாக்கி விடும்.கோடை நாளில் கண்ட கண்ட மருந்துகளை முகத்தில் தடவுவது கூடாது. கிரீம் போன்றவற்றையும் மிதமாக உபயோகிக்க வேண்டும்.பகல் நேரங்களில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி விழா போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டி நேரிட்டால் ஸ்னோ,கிரீம் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தினால் முகத்தில் ஒரு மாதிரியான பிசுபிசுப்பு ஏற்பட்டு முக வசீகரத்தையே கெடுத்து விடும். அந்த மாதிரியான சமயங்களில் வெறும் பவுடர் பூச்சு மட்டுமே போதும்.பவுடர் கூட மிகவும் இலேசாக பூசப்பட்டிருக்க வேண்டும்.கோடை நாளில் கையில் ஒரு கைக்குட்டை இருக்க வேண்டும்.முகத்தில் வியர்வை தோன்றினால் அதை கைக்குட்டை ஆல் ஒற்றி ஒற்றி அகற்ற வேண்டும். அழுத்திக் துடைக்கக் கூடாது. அப்படி துடைக்கும் பொது முகப்பூச்சு கலைந்து திட்டு திட்டாக நின்று முக அழகைக் கெடுத்துவிடும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பார்ட்டி, பாதி சம்பளம்... துளசி காட்டில் வறட்சி
» மரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்
» மரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்
» கோடைக் கால கூந்தல் பராமரிப்பு
» கோடைக் கால செம்பருத்தி ஜூஸ்
» மரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்
» மரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்
» கோடைக் கால கூந்தல் பராமரிப்பு
» கோடைக் கால செம்பருத்தி ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum