சரும வகைகளும், பிரச்சனைகளும் சருமத்திற்கு
Page 1 of 1

தலைமுடியைப் போலவே ஒவ்வொருவருக்கும் சரும வகையும் வேறுபடும். உலர்நத் சருமம், எண்ணெய்ப் பசை சருமம், நார்மல் சருமம், காம்பினேஷன் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக் கூடிய சருமம் என்று ஐந்து வகை உள்ளது. தங்களின் சருமம் எந்த வகையைச் சார்ந்தது. அதில் உள்ள பிரச்சனை என்னவென்று அறிந்துகொண்டு அதற்குத் தருந்தவாறு தீர்வு காண்பது நல்லது.
உலர்ந்த மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு
சந்தனப் பவுடர் & 2 டீஸ்பூன்
புதினா சாறு & 4லிருந்த 8 துளிகள்
பன்னீர் & சிறிதளவு
இவை கலந்து முகத்தில் 10 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் நன்றாக இருக்கும்.
பாதாம் பருப்பு & 4 (அரைத்தது)
தேன் & ஒரு டீஸ்பூன்
பால் & ஒரு டீஸ்பூன்
இவை கலந்து முகம், கழுத்து பகுதியில் தடவி கழுவலாம்.
ஒரு டீஸ்பூன் பால் ஏட்டை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
மில்க் பவுடர் & 4 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் & 1 துளி
தண்ணீர் & சிறிதளவு
இவை கலந்து முகத்தில் போட்டு கழுவலாம்.
மஞ்சள் வாழைப்பழ கூழ். ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் ஃப்ரூட் இவை இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், உலர்ந்த சருமம் மென்மையாகும்.
ஸ்க்ரப் செய்ய
சந்தனப் பவுடர் & 2 டீஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் & 1 டீஸ்பூன்
கடலை மாவு & 2 டீஸ்பூன்
பச்சைப் பயறு மாவு & 2 டீஸ்பூன்
ரோஜா இதழ் (தூள்) & 1 டீஸ்பூன்
முல்தானி மெட்டி & 4 டீஸ்பூன்
குளிக்கும் சமயம் சருமத்தில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
இந்த பவுடரில் சிறிது நீர் கலந்து வட்ட வடிவமாகத் தேய்த்துக் குளித்தால் சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கும். எப்பொழுதும் ஸ்க்ரப் பவுடருடன் நீர் சேர்த்து செய்யவும். இல்லையெனில் சருமம் எரியும்.
இதை அடிக்கடி செய்யக் கூடாது. ஸ்க்ரப் பவுடரை சிறிதளவு வைத்துக் கொண்டு, எப்பொழுதாவது மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இந்தப் பவுடருடன் வேப்பிலைப் பொடி சிறிது கலந்து வைத்தால் பூச்சி வராது.
உலர்ந்த சருமத்தினர் தேய்த்துக் குளிக்க எண்ணெய்
நல்லெண்ணெய் & 150 மி.லி.
விளக்கெண்ணெய் & 150 மி.லி.
ஆலிவ் எண்ணெய் & 150 மி.லி.
இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து அடுப்பில் வைத்து சூடு பறக்கக் காய்ச்சவும். எண்ணெய் சூடாக இருக்கும்போதே 250 கிராம் வெள்ளரி விதைப் பொடியை அதில் போட்டு மூடி வைக்கவும். இரண்டு நாள் ஊறிய பிறகு அதை பயன்படுத்தலாம்.
தேவைக்கேற்ப எண்ணெயை எடுத்து உடலில் தேய்த்து அரை மணி நேரம் ஊறி யபிறகு, குளியல் பொடி தேய்த்துக் குளிக்கலாம்.
எண்ணெய்ப் பசை சருமம்
பப்பாளிக் கூழ் & ஒரு டீஸ்பூன்
வேப்பிலைப் பொடி & அரை டீஸ்பூன்
முல்தானி மெட்டி & 2 டீஸ்பூன்
இதை சிறிதளவு பன்னீரில் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இறந்த செல்களை நீக்கவும் இந்தப் பொடி உபயோகமாகும். ஆரஞ்சு பழச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்து முக்ததில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் எண்ணெய்ப் பசை நீங்கும்.
(ஆரஞ்சு, எலுமிச்சை சாறை அப்படியே போடுவதை விட சிறிது நீர் கலந்து போடுவது சருமத்திற்கு பாதுகாப்பானது).
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஆயில்ஃப்ரீ அல்லது சோப் ஃப்ரீ யீணீநீமீ ஷ்ணீsலீ உபயோகிக்கலாம்.
நார்மல் சருமம் இது பிரச்சினையில்லாத சருமம், எந்த வகையான அழகு சாதனங்களும், சிகிச்சையும் ஏற்றுக் கொள்ளும். காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
காம்பினேஷன் சருமம் நெற்றி, மூக்கு, தாடை பகுதி எண்ணெய்ப் பசையாகவும், மீதமுள்ள பகுதி உலர்ந்தும் இருக்கும். எனவே அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு சிகிச்சையை செய்ய வேண்டும்.
அலர்ஜி சருமம் கவனமாகக் கையாள வேண்டிய சருமம் இது. ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டீஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடத்தில் கழுவலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கீரை வகைகளும் பொடி வகைகளும்
» பெண்களும் பாய்பிரண்ட் பிரச்சனைகளும்!
» சர்க்கரை வியாதியும் பாலியல் பிரச்சனைகளும்!
» இன்றைய தமிழகம் பிரச்சனைகளும் தீர்வுகளும்
» பல் அறுவை சிகிச்சையும், இருதயப் பிரச்சனைகளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum