தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

Go down

பயத்தம் பருப்பில் பளபளப்பு! Empty பயத்தம் பருப்பில் பளபளப்பு!

Post  ishwarya Fri Feb 22, 2013 5:59 pm

பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்...

"அஹா.... இது என் முகம் தானா?" என்று ஆனந்த அதிர்ச்சியில் சிலையாகி நிற்பீர்கள்.

தோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை 1. துளசி 4. பூலான் கிழங்கு 1. ரோஜா மொட்டு 2. கசகசா அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே தயிரில் ஊறவைத்து. மறுநாள் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன். கஸ்தூரி மஞ்சள் தூள் 1 சிட்டிகை கலந்து கொள்ளலாம்.

குளிப்பதற்கு முன்பு முகத்துக்கு இந்த பேக் போட்டு. பத்து நிமிடம் கழித்து அலம்புங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வாருங்கள். கண்ணாடி பார்க்கும் போது அசந்து போவீர்கள்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை இலை முகத்தை "ப்ளீச்" ஆக்கும். துளசி, தோலை மிருதுவாக்கும். ரோஜா மொட்டு "பளபளப்பு" தரும். வேப்பிலை பருக்களை ஒழிக்கும். பூலான்கிழங்கு வாசனையை வழங்கும் கஸ்தூரி மஞ்சள் மினுமினுப்பு தரும்.

இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க,

விசேஷமான ஒரு குளியல் பவுடர்....

பயத்தம் பருப்பு அரை கிலோ, சம்பங்கி விதை 50 கிராம், செண்பகப்பூ 50 கிராம், பொன் ஆவாரம் பூ 50 கிராம், கோரைக்கிழங்கு 100 கிராம். இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும், குளிக்கும் போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும்.

முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் "திட்டுகள்" தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த "கருப்புக் கவலைகளை" போக்கி முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற.

"ப்ளீச்" பவுடர்...

பயத்தம்பருப்பு அரை கிலோ, கசகசா 100 கிராம். பாதாம் 10 கிராம், பிஸ்தா 10 கிராம், துளசி 20 கிராம், ரோஜா மொட்டு 20 கிராம்... இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவுங்கள்.

"எங்கே போச்சு கருமை?" என்று திகைத்து நிற்பீர்கள்.

தலையில் மட்டுமல்லாமல் சிலருக்கு உடல் முழுக்கவேகூட சருமம் வறண்டு வருத்தம் வாட்டியெடுக்கும் அவர்களின் வருத்தத்தை விரட்டவே இந்த டிப்ஸ்...

பயத்தம் பருப்பைத் தனியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து டீஸ்பூன் நல்லெண்ணையைச் சிறிது சூடாக்கி, அதில் தேவையான அளவு பவுடரைக் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். குளிக்கும் போது தலை முதல் கால் வரை பூசி, சூடான நீரினால் அலம்புங்கள்.

இந்தப் பயத்தம் குளியலை வாரம் இருமுறை மேற்கொண்டாலே, மேனி புத்துணர்ச்சியுடன் பளபளக்கும்.

பலருக்கும் முகம் பளிச்சென்று இருக்கும். ஆனால் கை, கால்களில் மட்டும் சுருக்கம் தோன்றி, முதிய தோற்றம் காட்டும்.

இந்தச் சுருக்கங்களை துரத்தியடிக்க ஒரு பேஸ்ட்.....

ஒரு டீஸ்பூன் பயத்தம் மாவுடன் 5 துளி எலுமிச்சை சாறு கலந்துகொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர் சேர்த்து பேஸ்டாக்கி, சுருக்கம் விழுந்த பகுதிகளில் இந்த பேஸ்ட்டைச் சில நிமிடங்கள் தடவிக்கொண்டே இருந்துவிட்டு, சூடான நீரில் கழுவி விடுங்கள். ஊற விடக் கூடாது. விரைவிலேயே சுருக்கங்கள் மறைந்து. தோல் மிருதுவாகும்.

முக அழகைக் கெடுக்கும் பருக்கள், தேமல், தழும்பு, மாசு, மரு போன்றவற்றைப் போக்கி, முகத்தைக் கண்ணாடி போல மினுமினுக்க செய்கிற ஸ்பெஷல் பவுடர் இது....

பயத்தம் மாவு 1 டீஸ்பூன், வெட்டிவேர் பவுடர் அரை டீஸ்பூன், தயிர் 1 டீஸ்பூன். இவற்றைக் கலந்து கொண்டு முகத்தில் உள்ள பருக்கள், தேமல், தழும்பு பகுதிகளின் மீது இந்தப் பேஸ்ட்டை லேசாக அழுத்திப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து அலச தடம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!

பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிற பாதங்களால் படுகிற இம்சை சொல்லி மாளாது. வெடிப்புகளால் மனம் வெடிப்பவர்களுக்கான மகிழ்ச்சி பேஸ்ட் இது!

தே. எண்ணெய் 1 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், பசுநெய் 4 துளி, மஞ்சள்தூள் 2 சிட்டிகை. இவற்றுடன் 1 டீஸ்பூன் பயத்தம் மாவைச் கலந்து கொள்ளுங்கள். தினமும் தூங்கப்போகும் போது வெடிப்பு இருக்கும் பகுதியில் ஐந்து நிமிடங்கள் தடவியபடி இருந்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

விரைவிலேயே வெடிப்பு, கருமை நீங்கி பாதம் மெத்தென்று ஆகிவிடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum