தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயத்தம் பருப்பு தயிர் வடை

Go down

பயத்தம் பருப்பு தயிர் வடை Empty பயத்தம் பருப்பு தயிர் வடை

Post  ishwarya Tue Feb 19, 2013 12:27 pm

பயத்தம் பருப்பு & 1 கப், எண்ணெய் & பொரிக்கத் தேவையான அளவு, கடைந்த கட்டித் தயிர் & 2 கப் (புளிப்பு இல்லாமல்), இந்துப்பு & 1 சிட்டிகை, உப்பு & தேவையான அளவு, பச்சை மிளகாய் & 2 அலங்கரிக்க, மிளகாய்த்தூள் & 1 டீஸ்பூன், இனிப்பு, புளிப்பு சட்னி அல்லது சாஸ், வறுத்த சீரகத்தூள் & 1 டீஸ்பூன், கொத்தமல்லி தழை & சிறிது நறுக்கியது, ஓமப்பொடி, சாட் மசாலா & 50 கிராம்.


பருப்பைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். பின் சீரகம் சேர்த்த உடனே, வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, சிறுசிறு உருண்டைகளாக பொரித்தெடுக்கவும்.

வடித்து, நல்ல அகலமான பாத்திரத்தில் (குழியாக உள்ளது) இந்த பொரித்த வடைகளை அடுக்கவும்.
சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு இந்துப்பு கலந்த தயிரை அதன்மேல் ஊற்றி வைக்கவும்.

நன்றாக ஊறிவிடும். சாப்பிடும்போது மீண்டும் கொஞ்சம் தயிர் ஊற்றி அலங்காரத்திற்கு உள்ளதைத் தூவி பரிமாறவும்.

வித்தியாசமான சுவையில் உள்ள இதை பெரியவர் முதல் சிறியவர் வரை சுவைத்து சாப்பிடுவார்கள். வட இந்தியர்களின் விருப்பமான தயிர் வடை இதுதான்!
குறிப்பு: பருப்பு அரைக்கும்போது உப்பு அளவாகப் போடவும். ஓமப்பொடி, சாட் மசாலா, சாஸ் மற் றும் தயிரிலும் உப்பு இருப்பதால் தேவை யானதைப் பார்த்து போடவேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum