தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீங்களும் ஐஸ்வர்யா ராய் தான்

Go down

நீங்களும் ஐஸ்வர்யா ராய் தான் Empty நீங்களும் ஐஸ்வர்யா ராய் தான்

Post  ishwarya Fri Feb 22, 2013 2:41 pm

அழகு என்பது ஒரு தவம் போன்றது. அழகாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அந்த எண்ணம் ஒரு மந்திரம் போல மனதில் ஓடிக்கொண்டே இருந்தால்தான், அந்தத் தவம் நிறைவேறும்.

நடிகைகள், பிரபலங்கள் எனப் பல பெண்களின் மாறாத அழகைப் பார்த்து வியந்திருக்கிறோம். நாளுக்கு நாள் அவர்களது அழகிலும் இளமையிலும் மெருகு கூடுவதைக் கவனித்திருக்கிறோம். அவர்கள் மட்டுமென்ன பிரம்மனிடம் ஸ்பெஷல் வரமா வாங்கிக் கொண்டு வருகிறார்கள்? அழகாக இருந்தே தீர வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. 24 மணி «!நரமும் அதற்காக மெனக்கெட அவர்கள் தயங்குவதில்லை. சாதாரண பெண்களுக்கும், நட்சத்திர முகங்களுக்கும் அதுதான் வித்தியாசம். சாப்பாடு, தூக்கம் மாதிரி அழகுப் பராமரிப்பையும் அவசியமான அன்றாடக் கடமைகளில் ஒன்றாக்கிக் கொண்டாலே போதும். நீங்களும் அழகிதான்!

‘‘அழகு விஷயத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைவிட, எதையெல்லாம் செய்யக்கூடாது என்கிற அடிப்படை அறிவு மிக முக்கியம்’’ என்கிறார் ‘நேச்சுரல்ஸ்’ சவுமியா. ‘‘அழகு என்பது ஒரே நாளில் கை வருகிற விஷயமல்ல. அதற்கு தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் சில கவனிப்புகள் அவசியம்’’ என்கிற அவர், அவற்றைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.

தினம் ஒரு முறை தூக்கம் ...

அழகுக்கு ரொம்பவும் பிடித்த விஷயம் தூக்கம். 6 மணி நேரமோ, 8 மணி நேரமோ... குறையில்லாமல், திருப்தியாகத் தூங்க வேண்டும்.

காலை, மதியம், இரவு என மூன்று வேளைகள் முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். காலை, மதியத்துக்கு ஃபேஸ் வாஷும், இரவில் கிளென்சிங் மில்க்கும் உபயோகிக்கலாம். கிளென்ஸ் செய்ததும் டோனர் எனப்படுகிற ஸ்கின் டானிக்கில் பஞ்சை நனைத்து, அப்படியே முகத்தில் ஒற்றிக்கொள்ள வேண்டும். இது சருமத் துவாரங்களை மூடும். டோனர் இல்லாவிட்டால் சாதாரண குளிர்ந்த தண்ணீர் போதும். டோனிங் முடிந்ததும் மாயிச்சரைசர் தடவ வேண்டும். முதிர்ந்த சருமம் உள்ளவர்கள், ஆன்ட்டி ஏஜிங் மாயிச்சரைசர் உபயோகிக்கலாம்.

வெயிலோ, குளிரோ... வீட்டை விட்டு வெளியே காலெடுத்து வைத்தாலே சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். கிளம்புவதற்கு 15 நிமிடங்கள் முன் அதைத் தடவ வேண்டும். எத்தனை மணி நேரம் வெளியில் இருக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து ‘எஸ்.பி.எஃப் 15’ முதல் தேர்ந்தெடுக்கலாம்.

குளிப்பதற்கு எப்போதும் குளிர்ந்த தண்ணீரே சிறந்தது. வெந்நீரில் குளித்தால், சருமம் வறண்டு போகும். குளிர் காலத்தில் லேசான சூடுள்ள தண்ணீரில் குளிக்கலாம். குளித்து முடித்ததும் பாடி லோஷன் தடவுவதன் மூலம், சரும வறட்சியைத் தவிர்க்கலாம்.

தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்காமல், அடிக்கடி தண்ணீர் குடிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டால் உடலின் நச்சுகள் வெளியேறி, சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். முடிகிற போதெல்லாம் ஃப்ரெஷ் ஜூஸ் மற்றும் பழ, காய்கறி சாலட்டுகள் எடுத்துக்கொள்வது அழகுக்கு போனஸாக அமையும்.

வெளியே போகிறவர்கள் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டாம். அது சுற்றுப்புற தூசு, அழுக்கு என எல்லாவற்றையும் தலையில் சேர்க்கும். எண்ணெய்க்குப் பதில் ஹேர் சீரம் உபயோகிக்கலாம். முடியும் பறக்காது. பிசுபிசுப்பாகவும் இருக்காது.

வாரம் ஒரு முறை...

வாரம் முழுக்க சருமத்தில் சேர்ந்த அழுக்கை ஸ்க்ரப் உபயோகித்து அகற்ற வேண்டும். அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப கிரீம் அல்லது ஜெல் வடிவ ஸ்க்ரப்பில் சிறிது எடுத்து, முகத்தில் தடவி, வட்ட வடிவமாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். அடுத்து டோனர் உபயோகித்து, ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பழச்சாறு அல்லது பழக்கூழுடன் கலந்து முகத்தில் தடவிக் காய விட்டுக் கழுவலாம்.

சிலருக்கு தினம் தலை குளிக்க வேண்டும். தினம் ஷாம்பு போட்டுக் குளிப்பதும் தவறு. சும்மா குளிப்பதும் கூடாது.3 நாள்களுக்கு ஒரு முறை மிதமான ஷாம்பு உபயோகித்துக் குளிக்கலாம். ஷாம்பு குளியலுக்குப் பிறகு கட்டாயம் கண்டிஷனர் உபயோகித்து (முடிக்கு மட்டும். மண்டையில் படக் கூடாது), 2 நிமிடங்கள் விட்டு, அலச வேண்டும்.

தலைக்கும் உடம்புக்கும் எண்ணெய் வைத்து, 1 மணி நேரம் ஊறி, மைல்டான ஷாம்பு அல்லது மூலிகை சீயக்காய் பொடி உபயோகித்துக் குளிப்பதன் மூலம், உடல் சூடு தணியும். சருமம் பளபளப்பாகும்.

நாம் பெரும்பாலும் கால்களுக்கு செருப்புதான் அணிகிறோம். மிகச் சுலபமாக விரல் இடுக்குகளில் அழுக்குச் சேரும். பொறுக்கும் சூடுள்ள தண்ணீரில் கல் உப்பு, கொஞ்சம் ஷாம்பு கலந்து, கால்களை ஊற வைக்கவும். நெயில் பிரஷ் மூலம் நகங்களைச் சுத்தப்படுத்தவும். பியூமிஸ் ஸ்டோனால் பாதங்களைத் தேய்த்தால், இறந்த செல்கள் அகலும். கால்களைத் துடைத்துவிட்டு, மாயிச்சரைசர் தடவலாம். கைகளுக்கும் இதே முறையில் செய்து, கடைசியாக பாடி லோஷன் தடவலாம்.

மாதம் ஒரு முறை...

சருமத்தின் ஆழமான படிவங்களில் உள்ள அழுக்குகளை நீக்க பியூட்டி பார்லரில் செய்கிற ஃபேஷியலின் மூலமே அகற்ற முடியும். சருமத்தின் தன்மைக்கேற்ற ஃபேஷியல் பார்லரில்தான் சாத்தியம்.

கைகளையும் கால்களையும் முறையான மேனிக்யூர், பெடிக்யூர் சிகிச்சைகளின் மூலம் மிருதுவாக, அழகாக வைத்துக் கொள்ளவும் பார்லர் சிகிச்சை அவசியம்.

சிலருக்கு முதுகுப்பகுதிகளில் பொரி பொரியாக இருக்கும். பாடி ஸ்க்ரப் மற்றும் பாடி பாலீஷ் சிகிச்சைகளின் மூலம் அதை சரி செய்வதோடு, ஒட்டுமொத்த உடம்புக்கும் பளபளப்பைக் கூட்டலாம்.

ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்ற சில கெமிக்கல் சிகிச்சைகளை வீட்டில் செய்து கொள்வதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. தவிர ஏற்கனவே செய்து கொண்ட கெமிக்கல் சிகிச்சைகளின் பலன்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், மாதம் ஒரு முறை பார்லரில் சிகிச்சை எடுப்பது அவசியம்.

கை, கால்கள் மற்றும் தேவையற்ற இடங் களில் ரோம வளர்ச்சியை அகற்ற மாதம் ஒரு முறை வாக்சிங் அவசியம். வாக்சிங் செய்வது சுத்தமான உணர்வைத் தருவதோடு, வியர்வை நாற்றத்திலிருந்தும் காக்கும்.

செய்யாதீங்க!

சருமத்தின் தன்மை தெரியாமல் எந்த அழகுசாதனத்தையும் உபயோகிக்க வேண்டாம். அழகின் முதல் எதிரி வெயில்! அது சருமத்தை மட்டுமின்றி, கண்களையும், கூந்தலையும் கூடப் பாதிக்கும். கண்களுக்கு யுவி பாதுகாப்புக் கண்ணாடி இல்லாமலோ, கூந்தலைப் பாதுகாக்கக் குடையோ, ஸ்கார்ஃபோ இல்லாமலோ வெளியே போகக்கூடாது.

ஈரக்கூந்தலை வாரக் கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை முன்பக்கம் போட்டு, டவலால் தட்டக் கூடாது. அதனால் முடி உடையும்.
டைட்டான போனி டெயில், பின்னல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தினமும் ஒரே இடத்தில் வகிடு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி எடுத்தால் அந்த இடத்தில் முடி உதிர ஆரம்பித்து, மண்டைப் பகுதி தெரிய ஆரம்பிக்கும். ஸோ... வகிடு எடுக்கும் ஸ்டைலை அடிக்கடி மாற்றவும்.

முகத்தில் நகங்கள் படவே கூடாது. பருவோ, கட்டியோ, அதைத் தொடுவது, நகத்தால் கிள்ளுவதெல்லாம் கூடவே கூடாது. ராத்திரியில் எக்காரணம் கொண்டும் மேக்கப்புடன் தூங்கக்கூடாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum