தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேவநாதப் பெருமாள் கோயில்

Go down

தேவநாதப் பெருமாள் கோயில் Empty தேவநாதப் பெருமாள் கோயில்

Post  meenu Mon Jan 14, 2013 2:28 pm

கடலூரில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தலம் தேவநாதப் பெருமாள். ஹேமாம் புஜவல்லித்தாயார், கோவில் 108 திவ்ய சேத்திரங்களில் ஒன்று, கருட நதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகளால் புகழ் பெற்றவை என்றாலும் அதை அதைவிட இங்கிருக்கும் ஆஷாட மலை (ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்) ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் மேலும் சிறப்பு பெற்றவை.

இங்கே தனது இளம் வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப் பெற்றவர்.

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர். அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது. தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார்.

ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும் (அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹா நவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
»  உலகளந்த பெருமாள் கோயில்
» லோகநாதப் பெருமாள் கோயில்
» லோகநாதப் பெருமாள் கோயில்
» ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கோயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum