ரிச் மஷ்ரூம் கிரேவி
Page 1 of 1
ரிச் மஷ்ரூம் கிரேவி
என்னென்ன தேவை?
காளான் - 200 கிராம்,
தக்காளி - 2,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கிரீம் - அரை கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் - தலா கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப, வெண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
காளானை நான்கைந்து முறை மண் வாசனை போகக் கழுவி, சுத்தம் செய்து, விருப்பமான வடிவில் வெட்டவும். பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளியை அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் நெய் சூடாக்கி, அதில் வெங்காயத்தை வதக்கவும். அது நன்கு சிவந்து வரும் போது, தக்காளி, இஞ்சி, மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு காளான் சேர்க்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, காளான் வெந்து, கிரேவியாக வரும் போது, கிரீம் சேர்த்து இறக்கி, சிறிது வெண்ணெய் சேர்த்து, கொத்தமல்லியால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum