தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோயா புலாவ்

Go down

சோயா புலாவ்         Empty சோயா புலாவ்

Post  ishwarya Fri Feb 22, 2013 12:37 pm

என்னென்ன தேவை?
சோயா பருப்பு - 1 கப்,
கைக்குத்தல் அரிசி - 2 கப்,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
ஏலக்காய் - 2,
முந்திரி - 4,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க.

எப்படிச் செய்வது?
சோயாவை 6 மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கைக்குத்தல் அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து, 2 பங்கு தண்ணீர் விட்டு, வழக்கமாக சாதம் வடிக்கிற நேரத்தைவிட, 20 நிமிடங்கள் கூடுதலாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். முந்திரி, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள சோயா பருப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றி, வதங்கியதும், தயாராக உள்ள சாதம், உப்பு, சீரகத் தூள் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவிப்
பரிமாறவும்.

பெண்கள் வாரம் 3 முறை இதைச் சாப்பிடலாம். சோயாவில் உள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென், ஐசோஃபிளவோன் மற்றும் ஆல்ஃபா லினோலிக் அமிலம் ஆகிய மூன்றும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம். புரதம் நிறைந்த உணவு இது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum