கதம்ப சாதம்
Page 1 of 1
கதம்ப சாதம்
என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - 1 டம்ளர்,
கடலைப்பருப்பு - அரை கப்,
துவரம் பருப்பு - 1 கப்,
முருங்கைக்கீரை - அரை கட்டு,
அரைக்கீரை - அரை கட்டு,
உப்பு - தேவைக்கேற்ப,
புளி - 1 எலுமிச்சை அளவு,
கொத்தவரங்காய் - 100 கிராம் (துண்டாக நறுக்கியது),
முருங்கைக்காய் - 2 (நீளமாக நறுக்கியது),
அவரைக்காய் - 100 கிராம் (துண்டாக நறுக்கியது),
கத்தரிக்காய் - 100 கிராம் (துண்டாக நறுக்கியது),
சேப்பங்கிழங்கு - 100 கிராம் (தனியாக வேக வைத்தது),
சிறுகிழங்கு - 100 கிராம் (தோலுரித்து வைத்துக்கொள்ளவும்),
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 4 (அ) 6 டீஸ்பூன்.
வதக்குவதற்கு...
பச்சை மிளகாய் - 6, வெங்காயம் - 1 கப்.
தாளிக்க...
கடுகு - 1 டீஸ்பூன், உ.பருப்பு - 1 டீஸ்பூன், க.பருப்பு - 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்.
அரைப்பதற்கு...
தேங்காய் - 1, சீரகம் - 2 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 6 (அ) 8.
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பு வகைகள், கீரை வகைகள் முதலியவற்றை ஒரு குக்கரில் போட்டு அரை மணி நேரம் தண்ணீர் விட்டு வைக்கவும். தேங்காய், சீரகம் அரைத்த விழுது, நசுக்கிய பூண்டு, இருமுறை கரைத்து வைத்த புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், நறுக்கிய காய்கறிகள், வதக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை அரிசி, பருப்பு கலவையுடன் சேர்த்து அனைத்தும் மூழ்குமளவு தண்ணீர் விட்டு, பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை வைக்கவும். பிறகு, குக்கரில் இருந்து எடுத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளிக்கவும். இது தளர இருக்க வேண்டும். தானே கெட்டியாகிவிடும். சூடு ஆற ஆற ருசி அதிகம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum