கார்ன் - பட்டாணி புலாவ்
Page 1 of 1
கார்ன் - பட்டாணி புலாவ்
என்னென்ன தேவை?
சாதத்துக்கு...
பாசுமதி அரிசி - 2 கப்,
ஏலக்காய், பட்டை,
கிராம்பு - தலா 3,
தாளிக்க - சீரகம் 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 2,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
கலவைக்கு...
வேக வைத்த பட்டாணி - 1 கப், கார்ன் (சோளம்) - 1 கப்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம்,
தக்காளி - தலா 1 கப்,
கீறிய பச்சை மிளகாய் - 4 முதல் 6,
மெலிதாக, நீளமாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
பாசுமதி அரிசியைக் களைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்க்கவும். காய்ந்ததும், சீரகம், ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு அரிசியையும் சேர்த்து, 2 மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் இளம் சிவப்பு நிறத்துக்கு வதங்கியதும், வெந்த பட்டாணி, தக்காளி, உப்பு, கரம் மசாலா, தனியா தூள் சேர்த்துக் கலந்து, பிறகு கடைசியாக சோளத்தைச் சேர்த்துக் கிளறவும். தயாராக உள்ள காய்கறிக் கலவையை, வடித்து வைத்துள்ள சாதக் கலவையுடன் கலந்து, 1 நிமிடம் கடாயிலேயே சுட வைத்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
» பட்டாணி புலாவ்
» கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்
» கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
» பட்டாணி புலாவ்
» கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்
» கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum