பட்டாணி புலாவ்
Page 1 of 1
பட்டாணி புலாவ்
திங்கட்கிழமை என்றாலே சோம்பேறித்தனமாக இருக்கும். அப்போது சமைப்பது நினைத்தாலே கோபமாக இருக்கும். ஏனெனில் சமைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதை நினைத்து தான். எனவே அப்போது பட்டாணியை வைத்து ஒரு சூப்பரான கலவை சாதத்தை செய்யலாம். இதனை செய்வது மிகவும் எளிது. அதிலும் இந்த பட்டாணி புலாவ் ரெசிபியை குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், குழந்தைகள் அவற்றை முழுவதும் சாப்பிட்டு விடுவார்கள். இந்த வகையில் இது அவ்வளவு சுவையாக இருக்கும். இப்போது அதன் செய்முறையை பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கழுவி நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு, பச்சை பட்டாணி, வறுத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்ன் - பட்டாணி புலாவ்
» கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்
» கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
» கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்
» கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum