தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடைக் கால சங்கமம் ஜூஸ்

Go down

கோடைக் கால சங்கமம் ஜூஸ் Empty கோடைக் கால சங்கமம் ஜூஸ்

Post  ishwarya Fri Feb 22, 2013 12:19 pm

கருப்புத் திராட்சை &  கிலோ
சிட்ரிக் அமிலம் & 1 தேக்கரண்டி
திராட்சை எஸன்ஸ் & 1 தேக்கரண்டி
சர்க்கரை & 2 கோப்பை
அன்னாசிப்பழம் & 1 கோப்பை
இஞ்சி & 1 அங்குலத் துண்டு
தேன் & 1 கோப்பை
ஏலக்காய் & 4
திராட்சையை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் ஆவியில் 20 நிமிடம் வேக வைக்கவும். பிறகு இறக்கி ஆறியதும் நன்றாக கைகளால் பிழிந்த ஒரு துணியில் வடிகட்ட வேண்டும்.

அன்னாச்த் துண்டுகளை மிக்ஸியில் அடித்து அதையும் அதையும் திப்பி இல்லாமல் வடிகட்டவும். இத்துடன் ஏலம் சேர்த்து அரைத்து வடிக்கட்டலாம்.
எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அளந்து கொள்ளவும். 4 கோப்பை இரந்தால், 2 கோப்பை சர்க்ரையை 1 கோப்பை தண்ணீர் கலந்து கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பொங்கி வரும்போது அழுக்கை நீக்கவும்.

சர்க்கரை மணம் அடங்கி இரட்டைக் கம்பி பதம் வந்ததும் பழச்சாறுகளையும், இஞ்சி சாற்றையும் கலந்து சிட்ரிக் அமிலம் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறக்கி ஆற வைத்து, எசன்ஸ், தேன் கலந்து பாட்டிலில் அடைத்து காற்று புகாமல் வைக்கவும்.

உபயோகிக்கும்போது கால் டம்ளர் ஜூஸ் எடுத்து, முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐஸ் துண்டுகள் சேர்த்து சாப்பிடலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum