இனிப்பு பருப்பு உசிலிக் கலவை
Page 1 of 1
இனிப்பு பருப்பு உசிலிக் கலவை
கடலைப்பருப்பு - 250 கிராம்,
பாசிப்பருப்பு - 250 கிராம்,
துவரம் பருப்பு - 250 கிராம்,
தேங்காய்த் துருவல் - 1 மூடி பெரியது,
வெல்லம் - முக்கால் கிலோ,
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
நெய் - 100 கிராம்,
முந்திரி பருப்பு - 20,
திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன்.
கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, துவரம் பருப்பு மூன்றையும் தனித்தனியே ஊற வைத்து, தனித்தனியே மிக்சியில் கரகரப்பாக அரைத்து, கலந்து குக்கரில் ஒரு தட்டில் வைத்து வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து உதிர்த்து வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில், சிறிது தண்ணீர் சேர்த்து, வெல்லத்தை சூடாக்கி, கரைத்து, வடிகட்டி, மீண்டும் பாகு பதத்திற்குக் கொண்டு வந்து, அந்தப் பாகை இந்தப் பருப்புக் கலவையில் கொட்டிக் கிளறவும்.
பிறகு நெய்யைக் காய வைத்து, முந்திரி, திராட்சையை வறுத்து, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து, பருப்புக் கலவையையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த இனிப்பு பருப்பு உசிலி, மிக ருசியானது. மகாசிவராத்திரிக்கு பிரசாதமாகப் படைக்கப் படுவது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உகாதி ஸ்பெசல் : கடலைப் பருப்பு இனிப்பு போளி
» கலவை சாதப் பொடி
» முருகனுக்கு தேனும், தினை மாவும் (கலவை)
» கம்பு இனிப்பு அடை
» இனிப்பு போளி
» கலவை சாதப் பொடி
» முருகனுக்கு தேனும், தினை மாவும் (கலவை)
» கம்பு இனிப்பு அடை
» இனிப்பு போளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum