கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிப்பது எப்படி?
Page 1 of 1

கேக்குகள் உலகெங்கும் வயது வித்தியாசம் இன்றி அனைவராலும் விரும்பப்படும் உணவு. அதுவும் கிறிஸ்துமஸ் நாளில் பல நாடுகளில் பல விதமான கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இலேசான, உலர்ந்த பழங்கள் கொண்ட கேக்குகளில் ஆப்பிள் மற்றும் பல உலர்ந்த ரக திராட்சைகள், கிரீம், முட்டை முதலியன சேர்த்து செய்யப்படும் கேக்குகள் வரை பல ரக கேக்குகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென தயார் செய்யப்படுகின்றன. சில கேக், பிஸ்கட், புட்டிங் தயாரிப்பு முறைகளை இங்கு பார்ப்போம்.
பாதாம் கேக்
மார்கரின் - 100 கி
பழுப்பு சர்க்கரை - 50 கி
முட்டை - 2
தானே உப்பும் மைதா மாவு - 175 கி
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
பால் - 4 டேபிள் ஸ்பூன்
சுத்தமான தேன் - 2 டேபிள் ஸ்பூன்
உடைத்த பாதாம் பருப்பு - 50 கி
சிரஃப் தயாரிக்க
தேன் - 150 மி.லி.
எலுமிச்சை பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
சுமார் 18 செ.மீ. அல்லது 7 அங்குலமுள்ள மட்டமான கேக் தட்டில் பேக்கிங் பேப்பரை லைனிங் செய்து வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் மார்கரின், சர்க்கரை, முட்டை, மாவு, பேக்கிங் பவுடர், பால், மற்றும் தேன் ஆகியவற்றை போட்டு நன்றாக நுரை வரும் படி மரக்கரண்டியால் கலக்கவும். இந்தக் கலவையை ஒவ்வொரு கரண்டியாக கேக் தட்டிலிட்டு பரவலாக நிரப்பவும். பாதாம் துண்டுகளை தூவவும். இந்தக் கலவை உள்ள கேக் தட்டை முன்பே சூடுபடுத்தப்பட்ட அவனில் வைத்து 350 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் 50 நிமிடங்கள் பேக் செய்யவும். ஒரு கம்பியை கேக்கில் நுழைத்தால் அது சுலபமாக, சுத்தமாக வெளியே வந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம்.
கேக் வேகும் சமயத்தில் சிரப்பை தயார் செய்யவும். ஒரு வாணலியில் தேனையும், எலுமிச்சை பழச்சாறையும் கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும். கேக்கை அவனிலிருந்து எடுத்தவுடன் சிரப்பை கேக்கின் மீது ஊற்றவும். இரண்டு மணி நேரமாவது கேக்கை பயன்படுத்தும் முன் குளிர வைக்கவும்.
டிரைபில் புட்டிங்
டிரைபில் என்றால் ஸ்பான்ஜ் கேக்கிலிருந்து அல்லது பழைய கேக்கிலிருந்து செய்யப்படும் இனிப்பு. இது பொதுவாக ஓயின் அல்லது ஜெல்லி நனைக்கப்பட்டு கஸ்டர்டு மற்றும் கிரீம் ஆல் மேலே தடவப்பட்டு இருக்கும் உணவுப் பொருள். முதலில் இந்த டிரைபில் புட்டிங் தயாரிக்கத்
தேவையான ஸ்பான்ஜ் கேக் செய்யும் முறை:
மைதா மாவு - 250 கி
சர்க்கரை - 200 கி
முட்டை - 6
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
வெனிலா எஸன்ஸ் - 1 டீஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 6 டே.ஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் - 2 டே.ஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் 3 முட்டையின் மஞ்சள் கருவையும், 3 முட்டைகளையும், சர்க்கரையையும் போட்டு, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். எஸன்ஸ் சேர்க்கவும்.
மைதாமாவை பேக்கிங் பவுடருடன் சேர்த்துக் சலிக்கவும். 3 முட்டையின் வெள்ளைக் கருவை முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். சலித்த மாவையும், முட்டையும், சர்க்கரையும் கலந்த கலவையில் சிறிது சிறிதாகப் போட்டு விரல் நுனிகளால் கலக்கவும். உருக்கிய வெண்ணெய்யையும், வெதுவெதுப்பான தண்ணீரையும் தயாரித்த கலவையில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். கடைசியாக அடித்த வெள்ளைக் கருவை கலவையுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். 10 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில், உருக்கிய வெண்ணெய்யை மிகவும் நன்றாகக் தடவவும். கலவையைத் தட்டில் போட்டு நிரப்பி விடவும். 400 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் சுமார் 30 டிகிரி முதல் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக் தயாரானவுடன் ஆற வைக்கவும்.
புட்டிங் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
ஆப்பிள் பழம் - 2
வாழைப்பழம் - 4
திராட்சைப்பழம் - 100 கி
கிரீம் - 1 கப்
கஸ்டர்ட் - 1 கப்
செய்முறை
எல்லாப் பழ வகைகளையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். கேக்கைக் குறுக்கு வாட்டில் 4 மெல்லிய பாகங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் முதலில் ஒரு பாகம் கேக்கை வைக்கவும். தயாரித்துள்ள சர்க்கரைத் தண்ணீரைத் தெளிக்கவும். நறுக்கிய பழத்துண்டுகளைச் சிறிதளவு போட்டுப் பரவலாக நிரப்பி விடவும். சிறிதளவு கிரீம், கஸ்டர்ட் இவைகளைப் பழத்தின் மேல் ஊற்றவும்.
மற்றொரு கேக் துண்டைப் பழத்துண்டுகளின் மேல் வைக்கவும். முதலில் சொன்னது போல் சர்க்கரை தெளிக்கவும். பழத்துண்டுகள், சிறிதளவு கிரீம், கஸ்டர்ட் முதலியவற்றை கேக்கின் மேல் சமமாகப் போடவும். மூன்றாவது கேக் துண்டையும் பழத்துண்டுகளின் மேல் வைத்து, முறையே சர்க்கரைத் தண்ணீர் தெளித்து, பழத்துண்டுகள், கிரீம், கஸ்டர்ட் இவற்றைப் போட்டு நிரப்பி விடவும். கடைசி அடுக்கு கேக்கின் மேல் கிரீமோ அல்லது கஸ்டர்ட் கலவையோ தடவி விடவும். மேலே செர்ரிப் பழங்கள், சில்வர் பால்ஸ், பழவகைகள் முதலியவற்றால் அலங்கரிக்கவும். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து “சில்” லென்று பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» Resumeரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது?
» ரொட்டி, பன், பிஸ்கெட் தயாரிப்பது எப்படி?
» ஃபிரைட் ரைஸ் தயாரிப்பது எப்படி?
» நோன்புக் கஞ்சி தயாரிப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum