தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர் கோயில்

Go down

 நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர் கோயில்  Empty நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர் கோயில்

Post  meenu Mon Jan 14, 2013 2:14 pm

சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, படாளம் கூட்டு ரோடு-வேடந்தாங்கல் நெடுஞ்சாலையில், மூசி வாக்கம் மின்வாரிய நிலையத்தில் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீராமானுஜ யோகவனம், படாளம் கூட்ரோடில் இருந்து அரசுப் பஸ், ஆட்டோ போன்றவைகளின் மூலம் இங்கு வர முடியும்.

ஸ்ரீராமானுஜர் தங்கி, யோக நிலையில் இருந்து வழிபட்ட காரணத்தால் இவ்விடம், "ஸ்ரீராமானுஜ யோகவனம்'' எனப் பிற்காலத்தில் அழைக்கப்படலாயிற்று. இங்கு ஸ்ரீசீனிவாச பெருமாள், மதுரவல்லி தாயார், ஸ்ரீநவகிரக விநாயகர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீஆண்டாள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

இவையாவும் வேதாந்த ஆகம முறையில் உருவாக்கப்பட்டு, மகாசம்ப்ரோஷணம் கண்டவை. இத்தலத்தில் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான், "ஸ்ரீநவ கிரக விநாயகராக'' வீற்றிருந்து, தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மனித வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளையும், சோதனைகளையும், சாதனைகளையும் தந்து ஆட்டிப் படைப்பவை நவக்கிரகங்களே! நவக்கிரகங்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள், தெய்வபலத்தால் மட்டுமே துன்பங்களிலிருந்து விடுபட முடியும். இந்த உண்மையை உணர்த்தும் விதத்தில் ஸ்ரீநவக்கிரக விநாயகர் அருளாட்சி தருகின்றார்.

சுமார் 8 அடி உயரமுள்ள ஒரே கல்லில் இந்த விநாயகப் பெருமான் திருவுருவம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் உடலில் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர் நெற்றிப் பகுதியைப் பீடமாகக் கொண்டு சூரிய பகவான் காட்சி அளிக்கிறார். விநாயகப் பெருமானின் வயிற்றுப் பகுதியில் சந்திர பகவான் வீற்றிருக்கிறார்.

கணபதியின் வலது மேல் கையில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். வலது அபய ஹஸ்தத்தில் புதன் தரிசனம் தருகிறார். ஆனை முகத்தானின் வலது காலில் அங்காரகன் வீற்றிருக்கிறார். விநாயக பகவானின் இடது மேல் கையில் ராகு உள்ளார். கஜமுக தெய்வத்தின் இடது கீழ் கையில் சுக்ர பகவான் உள்ளார்.

நவக்கிரக விநாயகரின் தலைப்பகுதியில் குருபகவான் உள்ளார். இடது காலில் கேது பகவான் காட்சி தருகின்றார். இவ்வாறு, தன்னை வணங்குபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் விலகும் என்று உணர்த்தி, தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு நல்லருளை வாரி வழங்குகின்ற ஞான பகவனாக "நவக்கிரக விநாயகர்'' திகழ்கிறார்.

சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இந்த விநாயக பெருமானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். நவக்கிரக விநாயகருக்கு பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு "அம்ருதபுரி வாசன்'' என அழைக்கப்படுகின்ற ஸ்ரீநிவாசப்பெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருப்பதி வெங்கடேசப்பெருமாளை போன்று, அலங்காரக் கோலத்துடன் இவர் காட்சி அளிக்கிறார். இங்கு மதுரவல்லி தாயார் என அழைக்கப்படுகின்ற "அலமேலு மங்கை தாயார்'' சந்நிதி தனியே உள்ளது.

ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதிக்கு மிக அருகில் மதுரவல்லி தாயார் கருவறை இருக்கின்றது. இங்கு தமிழ் வருடத்தில் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு நடைபெறுகின்ற திருவிழாக்களில் முக்கியமானது சிரவண தீப விழா.

ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத் திரம் அன்று, ஆலயத்தில் "சிரவண தீபம்'' ஏற்றப்படுகிறது. அன்று காலை ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிரவண தீப தரிசனத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

நடை திறக்கும் நேரம்.....

தினமும் காலை 7 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவற்றுடன் கோயில் நடை திறக்கப்படுகிறது. பிறகு பகல் 1 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum