நலம்புரியும் நவக்கிரக விநாயகர்
Page 1 of 1
நலம்புரியும் நவக்கிரக விநாயகர்
விநாயகர் தன் திருவுடலில் முருகர், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளார். அதே போல் நவக்கிரகங்களுக்கும் தனது உடலில் இடம் கொடுத்துள்ளார். வரம் தரும் நவக்கிரக விநாயகர் என்று அழைக்கப்படும் இவருக்கு, திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்ரோட்டில் அமைந்துள்ள அமருதபுரி என்ற ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் தனி சன்னதி உள்ளது.
வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, சாதனை, சோதனைகளை தந்து மனிதர்களை ஆட்டிப்படைப்பது நவக்கிரகங்களே. இப்படி பாதிக்கப்படுபவர்கள் துன்பங்களில் இருந்து தெய்வ பலத்தால் மட்டுமே விடுபட முடியும். இதற்கு இந்த நவக்கிரக விநாயகர் அருள்பாலிக்கிறார். பிரம்மாண்டமாக 8 அடி உயரத்தில் காட்சியளிக்கும் நவக்கிரக விநாயகரின் உருவ சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது.
அவரது உடலின் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நவக்கிரக விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது. நவக்கிரகங்களின் அதிபதியாக வீற்றிருக்கும் நவக் கிரக விநாயகர், தனது திருவுடலில் நவக்கிரகங்களை அடக்கி வைத்திருக்கும் பகுதிகள் விவரம் வருமாறு:-
நவக்கிரக விநாயகர் தனது குருவான சூரியனை நெற்றியிலும், குளுமை பொருந்திய சந்திரனை வயிற்றிலும், பூமிக்கு அதிபதியான செவ்வாயை வலது தொடையிலும், மகாவிஷ்ணுவின் அம்சமான புதனை வலது கீழ் தொடையிலும், உலகிற்கே குருவான வியாழனை தலையிலும், அசுர குருவான சுக்கிரனை இடது கீழ்கரத்திலும், தெற்கு பார்த்திருக்கும் காகத்துடன் கூடிய சனிபகவானை வலது மேற்கரத்திலும், ராகுவை இடது மேற்கரத்திலும், கேதுவை இடது காலிலும் கொண்டு அருள்புரிகிறார்.
இந்த நவக்கிரக விநாயகரை வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகுவதுடன், சகல செல்வங்களும் கிட்டும். எடுத்த காரியங் களில் வெற்றி பெறலாம். மேலும் இவரை வணங்குவதால் விநாயகரை மட்டுமன்றி, நவக்கிரகங்கள், யோக நரசிம்மர், அனுமன், கருடன் போன்ற தெய்வங்களையும் வணங்கியதற்கான பலனையும் பெறலாம்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர் கோயில்
» நலம் தரும் நவக்கிரக விநாயகர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum