ஆண்டவர் குப்பத்து கோவில்
Page 1 of 1
ஆண்டவர் குப்பத்து கோவில்
புராண காலத்தில் வேங்கட சுப்பிரமணியர், உரோமச முனிவருக்கும் சம்வர்த்தனருக்கும் நேரில் காட்சி கொடுத்து ஆண்டவர்குப்பத்தில் கோவில் கொண்டார். மக்கள் வழிபாட்டில் கந்தலோகமாகக் காட்சி அளித்தது அச்சிற்றூர். கலிகாலத்தில் வளமை குறைந்து, காலதேவனின் மாற்றத்தால் மழை வளம் பொய்த்தது.
அனைவரும் ஆன்மஞானமற்று, கர்மப்பலனில் சிக்கித் தவித்தனர். அதனால் அருள்பெருகும் கோவில்கள் எல்லாம் பூசையின் சிதைந்தன. ஐந்நிலம் எங்கும் எழுந்தருளித் திருவருள் புரிந்திருந்த, பற்பல கடவுளரின் திருமனிகளைக் கரையான் புற்று மூடிற்று. பல திருக்கோவில்கள் செடி, கொடி, புதர்கள் மண்டிக் காடாயின.
அவ்வாறு காலத்தால் சிதைந்த கோவில்களுள் ஆண்டவர்குப்பத்து திருக்கோவிலும் ஒன்றாகும். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர்குப்பம் ஆவாரங்காடாகக் கிடந்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆண்டிகள் எனப்படும் வகுப்பினராவர். அவர்கள் தங்களது பசுக்களை ஆவாரங்காட்டுக்குள் புல் மேய விடுவது வழக்கம்.
ஒருசமயம் புல் மேயச் சென்ற பசுக்கள், காட்டினுள் நன்றாகப் புல் மேய்ந்து, மாலையில் வீடு திரும்பிய உடன், வழக்கமான அளவிற்கு பால் கொடுக்காமல், மிகக் குறைவாக பால் சொரிந்தன. அனைவரது வீடுகளிலும் அதே நிலைமை. அன்றிலிருந்து பல நாட்கள் குறைவாகவே பால் கிடைத்தன.
அதன் காரணம் அறிய ஆண்டிகள் முடிவு செய்தனர். ஒருநாள் பசுக்களை பின்தொடர்ந்து சென்றனர். மறைவான ஓரிடத்தில் நின்று பார்த்தனர். அவர்கள் கண்ட காட்சி, யாவரையும் வியக்கச் செய்தது. அடர்ந்த, மேடான ஒரு புதரினுள் இருந்த சரக்கொன்ற மரம் அருகே சென்ற ஒரு பசு, அங்கிருந்த புற்றுக்கு நேராக நின்று பால் சொரிவதைக் கண்டனர்.
விரைந்து சென்று பசுவை விரட்டினர். பின்னர் சரக்கொன்றை மரத்தைச் சுற்றிலும் இருந்த செடி, கொடிகளை அழித்துக் காட்டைத் திருத்தினர். புற்றையும் சிறிது சிறிதாக அகற்றினார்கள். அவர்களுக்கு பெரும் வியப்பு! பசு பால் சொரிந்த இடத்தில் பாலசுப்பிரமணியரின் திரு உருவம் காணப்பட்டது.
முன் ஜென்ம புண்ணியத்தால், அவர்கள் கண்களுக்கு முருகன் வெளிப்பட்டான். பெருமானைக் கண்ட கண்கள் களித்தன. பக்திப் பெருக்கோடு கரம் குவித்து மக்கள் வணங்கினார்கள். அதனை அறிந்த மக்கள் யாவரும் அங்கு கூடினர்.
ஆறெழுத்து மந்திரத்தை ஜபித்து, பெருமானை அபிஷேகித்தனர். தூயமலர் கொண்டு அலங்கரித்தனர். பின்னர் ஒவ்வொருவரும் ஒரு பணி செய்து, கோவில் எழுப்பினர். முறையான வழிபாட்டை தொடர்ந்தனர். ஆண்டவனின் இருப்பிடம் பக்தியால் பொலிவு பெற்றது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆண்டவர் குப்பத்து கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
» வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில்
» வடபழநி ஆண்டவர் திருக்கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum