தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிண்டி மசாலா

Go down

பிண்டி மசாலா Empty பிண்டி மசாலா

Post  ishwarya Wed Feb 20, 2013 1:09 pm

* வெண்டைக்காய் கால் கிலோ
* சாட் மசாலா ஒரு தேக்கரண்டி
* மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
* கடலை மாவு ஒரு மேசைக்கரண்டி
* அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
* எண்ணெய் தேவையான அளவு
* மசாலா செய்வதற்கு:
* வெங்காயம் ஒன்று
* தக்காளி 4
* இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
* புதினா ஒரு கைப்புடி
* கரம் மசாலா 2 தேக்கரண்டி
* கசூரி மேத்தி ஒரு தேக்கரண்டி
* காய்ந்த மிளகாய் ஒன்று
* முந்திரி 15
* வெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
* கொத்தமல்லி அலங்கரிக்க
* உப்பு, எண்ணெய் தேவையான அளவு


வெண்டைக்காயை கழுவி வில்லையாக நறுக்கி நன்கு பரப்பி காய வைக்க வேண்டும். மாலையில் செய்வதென்றால் காலையிலே வெட்டி காய வைத்து விட வேண்டும்.அதனுடன் பொரிப்பதற்கு கூறியவை அனைத்தையும் சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.

கடலை மாவு ஏதாவது சிறிதளவு ஈரம் இருந்தாலும் எடுத்து விடும்.எண்ணெய் காய வைத்து பொரித்தெடுத்து எண்ணெய் உறுஞ்சும் பேப்பரில் போட்டு வைக்கவும். வெண்டைக்காய் பச்சையாக இருக்கும் போதே எடுத்து விட வேண்டும்.ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, புதினா, கரம் மசாலா, பொடித்த காய்ந்த மிளகாய், கசூரி மேத்தி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் போது நேரிடையாக வாணலியில் சேர்த்து வதக்கவும்.இப்பொழுது தக்காளி கலவையை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

மசாலாவிற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரமே வதங்கி விடும்.அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் வெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். முந்திரி சேர்த்தவுடன் தீயை குறைத்து வைக்கவும். இல்லையென்றால் அடிபிடிக்கும். சிறிதளவு தண்ணீர் கூட தெளித்துக் கொள்ளலாம்.

பிறகு பொரித்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். மசாலா வெண்டைக்காயில் நன்கு ஏறியதும் இறக்கவும்.
இறக்கியதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சூடு சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம். முந்திரி மற்றும் வெண்ணெய் சேர்க்காமலும் செய்யலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum