காராமணி மசாலா
Page 1 of 1
காராமணி மசாலா
பீன்ஸ் வகையில் ஒன்றான காராமணியில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இவற்றை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதனை மசாலா செய்து சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
வரமிளகாய் - 12
தேங்காய் துருவல் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காராமணியை அரைமணிநேரம் நீரில் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, காராமணியை கழுவி போட்டு, 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வரமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மிளகாயை, தேங்காய், பூண்டு, புளி, சிறிது வேக வைத்துள்ள காராமணி ஆகியவற்றோடு அரைக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, அதில் தக்காளியை போட்டு, தக்காளியின் தோலை உரித்து, அதனையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணி, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
பின்பு ஒரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான காராமணி மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum