ரைஸ் மஞ்சூரியன் க்ரேவி
Page 1 of 1
ரைஸ் மஞ்சூரியன் க்ரேவி
சாதம் - 1 கப்
கேரட் - 1, பீன்ஸ் - 6, சோயா சாஸ் - 2
டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, மல்லித்தழை -
சிறிது, எண்ணெய் - தேவைக்கு.
க்ரேவி: வெங்காயம் - 2, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2
டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு கலர் - சிறிது, எண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கு, மல்லித்தழை - தேவைக்கு.
நசுக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய்- 6.
சாதத்தை நன்கு குழைவாக பிசைந்துகொள்ளுங்கள். காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். நசுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு நசுக்குங்கள்.
சாதத்துடன் காய்கறி, மல்லித்தழை, சோயாசாஸ், உப்பு, நசுக்கிய விழுதில் சிறிது, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். இக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து
நசுக்கிய விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சோயாசாஸ், உப்பு சேர்க்கவும்.
2 கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரையும் ஆரஞ்சு கலரையும் கரைத்து வெங்காயக்
கலவையில் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
பரிமாறும் போது உருண்டைகளை சேர்த்து பரிமாறுங்கள். நூடுல்ஸுக்கும் ஃப்ரைட் ரைஸுக்கும் இந்த கிரேவி பிரமாதமான ஜோடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum