ஸ்பெஷல் எலுமிச்சை சாதம்
Page 1 of 1
ஸ்பெஷல் எலுமிச்சை சாதம்
பச்சரிசி & 2 ஆழாக்கு, எலுமிச்சை பழம் & 2 பெரியது, மஞ்சள் தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் & 6 முதல் 8, கறிவேப்பிலை & சிறிது, கொத்தமல்லித் தழை & சிறிது, துருவிய தேங்காய் & 2 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க...
காய்ந்த மிளகாய் & 3, கடுகு& அரை டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு & தலா 2 டீஸ்பூன், பெருங்காயத் தூள் & அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு & 20, திராட்சை & 1 டீஸ்பூன், சர்க்கரை & 1 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை & 2 டீஸ்பூன், எண்ணெய் & தேவைக்கேற்ப.
அரிசியை சுத்தம் செய்து, உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருக்கும்போதே அதன் மேல் சிறிது எண்ணெய் அல்லது நெய் போட்டு பிசறவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, திராட்சை, காய்ந்த மிளகாய், கீறிய பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்து சாதத்தில் கொட்டவும். அத்துடன் சர்க்கரை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய், கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்க்கவும்.
மேலும் ருசிக்க, பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்தோ, துருவிய கேரட்டை வதக்கியோ சேர்க்கலாம். எல்லாம் கலந்த பிறகு எலுமிச்சை பழம் பிழிந்து, நன்றாகக் கலந்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum