வெஜிடபிள் பனீர் டிக்கா
Page 1 of 1
வெஜிடபிள் பனீர் டிக்கா
பெங்களூர் தக்காளி - 2;
பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளகாய் - தலா ஒன்று;
பனீர் - 250 கிராம்;
கடைந்த தயிர் - கால் கப்;
மாங்காய்த்தூள், சாட் மசாலா, மிளகுத் தூள் - எல்லாம் சேர்த்து 2 டீஸ்பூன்;
சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு;
வெண்ணெய் - 1 கரண்டி.
பனீரை ஒரு அங்குலம் சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாய், தக்காளி ஆகியவற்றை விதைகளை நீக்கிவிட்டு, சதுரமாகவே நறுக்கிக் கொண்டு உப்பு, சீரகத்தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, கடைந்த தயிர் ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து இரண்டு மணி நேரம் ஊறவிடுங்கள். பின் ஒரு வடை கம்பியில் ஒரு துண்டு குடமிளகாய், ஒரு துண்டு வெங்காயம், தக்காளி, சிவப்பு குடமிளகாய், பனீர் என்று மாற்றி மாற்றி வரிசையாகக் குத்தி மிதமான தீயில் காட்டி, கம்பியை சுழற்றியவாறே சுட்டெடுங்கள்.
ஐந்து நிமிடம் போதும். அனைத்தும் வெந்துவிடும். கருக விடாமல் கவனமாக வாட்ட (சுட) வேண்டும். பின் எடுத்து சூடாக இருக்கும்போதே வெண்ணெயை அதன்மேல் தடவி சாட் மசாலாவைத் தூவி பரிமாறவும். இதை சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குறிப்பு: இந்த வெஜிடபிள் பனீர் டிக்காவை கரி அடுப்பில் செய்தால் சுவையாக இருக்கும். விரத நாட்களில் வெங்காயத்தை நீக்கிவிட்டு வித்தியாசமாக இப்படி செய்து சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபிள் பனீர் டிக்கா
» பனீர் டிக்கா
» பனீர் வெஜிடபிள் பிரியாணி
» சமையல்:பனீர் வெஜிடபிள் பிரியாணி
» சிக்கன் டிக்கா
» பனீர் டிக்கா
» பனீர் வெஜிடபிள் பிரியாணி
» சமையல்:பனீர் வெஜிடபிள் பிரியாணி
» சிக்கன் டிக்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum