இடியாப்பம் பீட்சா
Page 1 of 1
இடியாப்பம் பீட்சா
என்னென்ன தேவை?
இடியாப்பம் - 2,
(பதப்படுத்திய மாவில் வீட்டில் செய்தது அல்லது கடைகளில் கிடைக்கிற ரெடிமேட் இடியாப்பம்),
வட்டமாக, மெலிதாக நறுக்கிய குடமிளகாய்,
தக்காளி, வெங்காயம்,
வெள்ளரிக்காய் - தேவைக்கேற்ப,
உப்பு - தேவைக்கேற்ப,
சோயா சாஸ்,
தக்காளி சாஸ்,
சில்லி சாஸ் - தேவைக்கேற்ப,
துருவிய சீஸ் - கால் கப்,
மிளகுத் தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
இடியாப்பத்தை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் தடவி, அதன் மேல் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், குடமிளகாய் ஸ்லைஸ்களை வைக்கவும். தேவையான உப்பு, மிளகுத் தூள் தூவி, சீஸ் துருவலைப் பரப்பி அப்படியே பரிமாறவும்.
காய்கறிகள் பச்சையாகப் பிடிக்காதவர்கள், அவற்றைத் தனித்தனியே லேசாக வதக்கியும் செய்யலாம். இதை ரோல் மாதிரி சுருட்டியும் பரிமாறலாம். இனிப்புச் சுவை வேண்டுவோர், காய்கறிகளுக்கு பதில் பழக்கலவை, தேன், சர்க்கரை மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து ஸ்வீட் பீட்சாவாகவும் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum