தம் பிரியாணி
Page 1 of 1
தம் பிரியாணி
என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி - 2 கப்,
தயிர் - அரை கப்,
பெரிய வெங்காயம்,
தக்காளி - தலா 2,
பச்சை மிளகாய் - 3,
மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
சுத்தம் செய்த புதினா,
கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி,
நெய்யும் எண்ணெயும் சேர்த்து - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
வறுத்த முந்திரி - 8,
கேசரி கலர் - 1 சிட்டிகை,
பாலில் கரைத்த குங்குமப்பூ - சிறிது,
பச்சைப் பட்டாணி,
உருளைக்கிழங்கு, பீன்ஸ்,
கேரட் சேர்த்த கலவை - ஒன்றரை கப்,
எலுமிச்சை சாறு - தேவைக்கு.
தாளிக்க:
பட்டை - 1 துண்டு,
கிராம்பு, ஏலக்காய் - தலா 2,
அன்னாசிப்பூ,
மராட்டி மொக்கு,
பிரியாணி இலை - தலா 1.
அலங்கரிக்க:
மெலிதாக நறுக்கி,
நெய்யில் சிவக்க வறுத்த வெங்காயம் - 1,
முந்திரி - 6.
எப்படிச் செய்வது?
அரிசியைக் கழுவி ஊற விடவும். காய்களை விருப்பமான வடிவத்தில் நறுக்கவும். அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்க்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காய்கறிக் கலவை, மல்லி மற்றும் புதினா, கேசரி கலர் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கும்போதே காய்கறிகள் சிறிது வெந்துவிடும். பிறகு தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு 3 கப் சூடான தண்ணீர் சேர்த்துக் கொதிக்கும் போது, அரிசி, உப்பு சேர்க்கவும். மிதமான தீயில் அரிசியை வேகவிடவும். இரண்டு கொதி வந்ததும், குக்கர் மூடியால் மூடாமல், வேறு ஒரு கனமான தட்டு போட்டு மூடி வேக விடவும். இடையில் இரண்டு முறை திறந்து, மெதுவாக அரிசியைக் கிளறி, குக்கரை இறக்கவும். அடுப்பின் மேல் ஒரு பழைய தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் குக்கரை வைத்து, மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும். மூடிய குக்கரின் மேல் ஒரு கனமான பாத்திரம் அல்லது தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
இதுதான் தம் போடுவது. 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பிறகு மெதுவாகத் திறந்து பாலில் கரைத்த குங்குமப் பூ, எலுமிச்சை சாறு சேர்க்கவும். பரிமாறும் போது, வறுத்த வெங்காயம், முந்திரி சேர்த்து அலங்கரித்துக் கொடுக்கவும். பிறகு தயிர் பச்சடியுடன் சூடாகப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum