அக்டோபர் மாத பிரசாதங்கள்
Page 1 of 1
அக்டோபர் மாத பிரசாதங்கள்
நவராத்திரி திருநாட்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமாகப் பலகாரங்கள் செய்து கொலு பொம்மைகளுக்கு நிவேதனம் செய்து விட்டு, நம் வீட்டிற்கு கொலு தரிசிக்க வரும் பெண்களுக்கு அவற்றைக் கொடுப்பதிலும் ஒரு ஆன்மிகத் தத்துவம் இருக்கிறது. அதாவது, இந்த நவராத்திரி நன்நாட்களில் அம்பிகை எந்தப் பெண் ரூபத்திலாவது நம் வீட்டுக்கு வந்து, கொலுவைப் பார்வையிடுவாளாம். வரும் பெண்களில் அம்பிகை யாருக்குள் புகுந்திருப்பாள்? எப்படிக் கண்டுபிடிப்பது? ஆனால் அப்படிக் கண்டுபிடிக்க சிரமமே படவேண்டாம் என்பதாலும் ஒட்டுமொத்தமாக, வருவோர் அனைவருக்கும் நிவேதனப் பிரசாதங்களை வழங்குவதால், எந்த ரூபத்திலாவது இருக்கும் அம்பிகை அதை உட்கொண்டு ஆசிர்வதிக்கலாம் என்பதாலும் இந்தமுறை வெகு பழங்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாம் வழக்கமாகச் செய்யும் சுண்டல் வகையறாக்களோடு, இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பிரசாதங்களையும் கொலுவுக்கு சமர்ப்பித்து, வரும் ‘அம்பிகைகளுக்கு’ அளித்து மகிழ்வோம்.
சந்திரலேகா ராமமூர்த்தி
ட்ரை ஃப்ரூட்ஸ் புட்டு
என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 2 கப், பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய் தூள் - சிறிது, நெய் - சிறிதளவு, உடைத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா கால் கப், உப்பு - 1 சிட்டிகை, பல், பல்லாக வெட்டிய கொப்பரை - கால் கப், தேன் (விருப்பப்பட்டால்) - 2 டேபிள் ஸ்பூன், துண்டுகளாக நறுக்கிய பழக்கலவை -சிறிது.
எப்படிச் செய்வது?
கடாயில் நெய் காய வைத்து, அதில் முந்திரி, திராட்சை, பாதாம், கொப்பரை சேர்த்து வறுக்கவும். அத்துடன் கோதுமை மாவையும் கொட்டி, கை விடாமல், வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை அப்படியேவும் பரிமாறலாம். அல்லது தேன், பழக்கலவை சேர்த்தும் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : போக்
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : போக்
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : நவதானிய சுண்டல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum