இது மத்தூர் ஸ்பெஷல் வடை
Page 1 of 1
இது மத்தூர் ஸ்பெஷல் வடை
மண்டியா என்றாலே கர்நாடக மக்களின் வாயகள் இனிக்கும். ‘கர்நாடகத்தின் சர்க்கரை மாவட்டம்’ என்று சொல்லும் அளவுக்கு இங்கே கரும்பு விளைகிறது. மண்டியா மாவட்டத்தில் இருக்கும் குட்டிநகரான மத்தூரை ‘கர்நாடகத்தின் தஞ்சாவூர்’ என்பார்கள். எங்கு பார்த்தாலும் பசுமை படர்ந்து கிடக்கும் இந்நகரை ஒட்டித்தான்தமிழகத்து காவிரியின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் கிருஷ்ண சாகர் அணை இருக்கிறது. ராமானுஜர்
ஸ்தாபித்த செல்வநாராயண சுவாமி கோயில் இந்நக
ரின் ஆன்மிக அடையாளம். மற்றபடி, ‘திருப்பதி
சென்றேன்’ என்றால் எப்படி லட்டு வாங்கினாயா
என்பார்களோ... அதுபோல மத்தூர் போனேன் என்றால் ‘வடை வாங்கினாயா’ என்று வாய மாறாமல்
கேட்பார்கள். அந்த அளவுக்கு அவ்வூரோடு கலந்த
பதார்த்தம் மத்தூர் வடை.இது ஒக்கலிகர் சமூகத்தின் பண்பாட்டு பலகாரம்.ஒக்கலிகர்கள் மிகுந்த ஆசாரம் மிக்கவர்கள். இவர்களின் உணவுகள் ரசனையானவை. நம்மூரின்செட்டிநாட்டு உணவுக்கு ஒப்பானது ஒக்கலிகர்களின் அசைவ உணவுகள். இம்மக்களின் எல்லா விருந்துகளிலும் தவறாமல்
இடம்பிடிக்கும் அம்சங்களில் மத்தூர் வடையும் ஒன்று.மத்தூரின் பசுமை தஞ்சையை நினைவூட்
டுகிறது என்றால், அந்நகரின் கடைத்தெருக்கள் மதுரையை நினைவூட்டுகின்றன. வீதிக்கு
10 போண்டா&வடை கடைகள். சுவையான பதார்த்
தங்கள். எல்லாக் கடைகளிலும் தட்டுத்தட்டாக
மத்தூர் வடை.பார்க்க, ஆஞ்சநேயருக்குச் சாத்தும் மிளகு வடையைப் போல இருக்கிறது மத்தூர் வடை. சற்று கடினமாகத் தெரிந்தாலும் பற்களில்
பட்டவுடன் இலகுவாகி கரைகிறது.மத்தூர் தாண்டி வேறு எங்கு சாப்பிட்டாலும் அசல் சுவை இருக்காது என்பது இதன் சிறப்புகளில் ஒன்று. அந்தச் சுவைக்கு
காவிரி தண்ணீரே காரணம் என்கிறார்கள்.
அரிசி மாவு, மைதா மாவு, ரவா மூன்றும் சம
அளவு. வெங்காயம், கொஞ்சம் நெய, கசகசா, எண்
ணெய, உப்பு. காரத்துக்கு ஏற்றவாறு பச்சை மிளகாய.
கருவேப்பிலை, கொத்தமல்லி... இவற்றின் மொத்த
வடிவமே மத்தூர் வடை.அரிசி மாவு, மைதா, ரவையை ஒன்றாகக் கலக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய, கருவேப்பிலை, கொத்தமல்லியை சிறிய துண்டுகளாக வெட்டி இந்த மாவில் சேர்த்து, நெயயை உருக்கி ஊற்றி,தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவை பெரிய தட்டுவடை அளவுக்குத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்தால் மத்தூர் வடை ரெடி. மொறு மொறு பதம் விரும்பினால் ரவையை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலா பாலோடு சேர்த்துச் சாப்பிட்டால் எண்ணிக்கை மறந்து சாப்பிடலாம்.சும்மா சாப்பிடவே சுகம்தான். கொஞ்சம் தேங்காய சட்னியும், புதினா சட்னியும் கிடைத்தால் பிரமாதம். மத்தூரை
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum