தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேலையில் ப்ரோமோஷன் வேண்டுமா?

Go down

வேலையில் ப்ரோமோஷன் வேண்டுமா? Empty வேலையில் ப்ரோமோஷன் வேண்டுமா?

Post  ishwarya Mon Feb 18, 2013 2:16 pm

ஒரு சிலருக்கு திறமை இருந்தும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் அதற்க்கேற்ற பதவி இல்லாது இருப்பார்கள். ஆன்மீக ரீதியாக இதற்கு பிரார்த்தனைகள் விசேஷ ஸ்லோகங்கள் இருக்கின்றன என்றாலும் கீழ்கண்ட விஷயங்களையும் கவனத்தில் கொண்டு அவற்றை கடைபிடித்து பின்னர் ஆன்மீக ரீதியிலான விஷயங்களுக்கு வருவோம்.

நாம் கடவுளிடம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம். ஓ.கே.?

அணுகுமுறையை மாற்றுங்கள் – அனைத்தும் மாறும்!

1) “அவனுக்கு ஒண்ணுமே தெரியாது சார்.. ஆனா பாருங்க ப்ரோமோஷன் மேல ப்ரோமோஷன் வாங்கிட்டு போய்ட்டான். நான் நாயா உழைக்கிறேன். ஆனா அதுக்கு மதிப்பு கிடையாது” என்று குமுறுவார்கள். அங்க தான் இருக்கு விஷயமே… நாய் மாதிரி உழைக்கவேண்டாமே. மனுஷனா உழைச்சால் போதுமே.

2) நீங்க எவ்ளோ நேரம் வேலை செய்றீங்கன்னு மேலோட்டமா தான் பார்ப்பாங்க. ஆனா எப்படி வேலை செய்றீங்கன்னு தான் எல்லாரும் கவனிப்பாங்க. உங்க பாஸ் உட்பட.

3) சரியான நேரத்துக்கு காலையில வர்றது, தேவைப்படும்போது கொஞ்சம் கூட இருந்து வேலையை முடிச்சு தர்றது, அடிக்கடி லீவ் போடாம இருக்கிறது இதெல்லாம் ரொம்ப முக்கியம். பொதுவாகவே அலுவலகத்துல நம்மோட மைனஸ் எதுவோ அதையே அங்கே இருக்குற மத்த புத்திசாலிகள் தங்களோட பிளஸ்ஸா மாத்திக்குவாங்க. உங்களை ஓவர்டேக் பண்ணி போய்ட்டே இருப்பாங்க. இத்துணைக்கும் உங்க கூட நல்லா பேசுவாங்க. நல்ல பழகுவாங்க. So, உங்க மைனஸை நீங்கள் அடையாளம் கண்டு அதை திருத்திக்கொள்ளவேண்டும்.

4) நீங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உங்கள் நிறுவனம் தருகிறதா என்பதை இதை நீங்கள் முதலில் உறுதிப் படுத்திக்கொள்ளுங்க. இன்னைக்கு நிறைய கம்பெனிகள் அதற்க்கு நல்ல ஸ்கோப் கொடுக்குறாங்க. நாம தான் பயன்படுத்திக்க தவறிடுறோம்.

5) உங்களால் என்ன செய்யமுடியும் அதை மிக சிறப்பாக இப்போது இருக்கும் நிலையில் செய்யவும்.

6) முக்கியமா அலுவலக நேரத்துல பேஸ்புக், இணையங்கள், பர்சனல் விஷயங்கள் பார்ப்பதை தவிர்க்கவும். பிரேக் டைமில் அவற்றை பார்க்கலாம். இல்லை வேலை முடிந்தபின்னர் அதற்கு சற்று நேரம் ஒதுக்கி பாருங்கள். (இங்கே நிறைய பேர் கோட்டை விடுவாங்க. நீங்க இங்கே ஸ்கோர் பண்ணுங்க.)

7) நீங்க சூப்பரா ஃபர்பார்ம் பண்ற விஷயம் முதல்ல எல்லாருக்கும் தெரியுதா? நம்மளை பத்தி நாம் பேச வேண்டாம். ஆனா நாம செய்ற வேலை நம்மைப் பத்தி பேசவைக்கணும். அது தான் முக்கியம். உங்களோட சுப்பீரியர்ஸ் கிட்டே நல்ல அணுகுமுறை இருக்கட்டும்.

Cool மெரிட்டை பேஸ் பண்ணி தான் ப்ரோமோஷன் என்பது இருக்கணும். ஆனா நிறைய ஆபீஸ்ல அது பாலிடிக்ஸை வெச்சு தான் நடக்குது. இதை நாம எப்படி எதிர்கொள்றது?

அவரை கேட்டா அவர் நிச்சயம் இதை முடிச்சு கொடுப்பாருப்பா… என்று உங்களை பற்றி ஒரு மதிப்பீடு இருப்பது அவசியம். உங்க கூட வேலை செய்றவங்க, உங்க மேலதிகாரிகள் மற்றும் உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க இவங்களோட ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் முக்கியம். அவங்களுக்கு கூடுமானவரை உதவி செய்ங்க. அவங்க சுமையை குறைக்க உதவி பண்ணுங்க. முக்கியமா உங்க நிறுவனத்தோட நிகழ்ச்சிகள்ல நீங்க அவசியம் கலந்துக்கனும்.

9) மேன்மேலும் வளரும் ஆர்வம் உங்களுக்கு இருப்பதை உணர்த்துங்கள். உங்கள் வளர்ச்சியிலும் ப்ரோமொஷனிலும் உங்களுக்கு அக்கறை இருப்பதை உணர்த்துங்கள். அதே சமயம் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ப்ரோமோஷன் தாமதமானால் அதுக்காக விரக்தியடையக் கூடாது. இப்போ பார்த்துக்கிட்டுருக்கிற வேலையை இன்னும் சிறப்பாக செய்யுங்கள். இதைவிட சிறப்பாகே எவரும் செய்ய முடியாது என்று கூறுமளவிற்கு உங்கள் பணி இருப்பது அவசியம்.

10) எல்லாவற்றுக்கும் மேலாக மேலதிகாரிகளை பற்றியோ அல்லது உங்கள் சீனியர்களைப் பிறரிடம் புறம்பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும். புறம் பேசுவதே பலருக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை தட்டி பறித்துவிடுகிறது. தவிர, அது நமது குடுமியை மற்றவரிடம் கொடுப்பதற்கு ஒப்பானது.

மேற்கூறிய விஷயங்களை கடைபிடிக்கும் அதே நேரத்தில் இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். குறுக்கு வழிகளை பின்பற்றி பதவி உயர்வு பெறுபவர்களை பார்த்து சஞ்சலப்படவேகூடாது. அவ்வாறு குறுக்கு வழிகளால் பதவி உயர்வு பெறுபவர்கள் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாது அவர்களது உயர்வு தற்காலிகமானதாகவே இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் வளரவே முடியாது. ஆனால் திறமையினால் வளர்ச்சி பெருபவர்களது உயர்வு சீராக இருக்கும். இது நிதர்சனமான உண்மை.

இப்படி அலுவலகத்தில் உங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டாலே உங்கள் பணி உயர்வு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது போலத் தான்.

தவிர முடிந்தால் தினமும் கீழ்கண்ட ஸ்லோகத்தை பக்தியுடன் சிரத்தையாக உச்சரித்து வாருங்கள்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – அபிராமி அந்தாதி

உங்கள் முயற்சியும் திருவருளும் சேர, அப்புறம் என்ன? ப்ரோமோஷன் தான்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum