தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

Go down

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும் Empty பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

Post  amma Mon Feb 18, 2013 1:09 pm

ஒரு மனித மிருகத்தால் ஆசிட் வீசப்பட்டு முகம் சிதைந்து விழிகளை இழந்து தவிக்கும் வினோதினியின் மருத்துவ செலவுக்கு உதவுவதும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரை ஓரளவாவது துடைப்பதுமே இந்த புத்தாண்டில் நாங்கள் செய்யவிருக்கும் முதல் கடமையாக கொண்டோம்.

நமது RIGHTMANTRA.COM சார்பாக CORE TEAM நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு சிறிய தொகை சேர்த்து, ப்ளஸ் என் நண்பர் ஒருவர் இதற்கென்றே யூ.எஸ்.ஸிலிருந்து எனக்கு அனுப்பிய தொகையையும் சேர்த்தது DD எடுத்து அதை சமூக சேவகர் ஐயா.திரு.பாலம் கலியாணசுந்தரம் அவர்கள் முன்னிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினியின் தந்தையிடம் அளித்தோம்.

பிற நண்பர்கள் செய்த உதவி (Direct transfer to his bank account) பற்றியும் அவருக்கு எடுத்து சொன்னோம்.

திரு.ஜெயபாலன் அவர்கள் நம்மிடம் கூறியதிலிருந்து வினோதினியின் மீது வீசப்பட்ட ஆசிட் மட்டும் ஒரு லிட்டருக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. ஐயோ… வினோதினிக்கு முகம் மட்டுமல்ல… உடலில் பல இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாலம் திரு.கலியாணசுந்தரம் அவர்கள் மூலம் நாம் இதை செய்தது ஏன்?
பாலம் ஐயா அவர்களுக்கு கூறியது என்ன?
எங்களிடம் வினோதினியின் தந்தை கூறியது என்ன ?
அவர்களின் பொருளாதார நிலை தற்போது எப்படி இருக்கிறது ?
வினோதினி எப்படி இருக்கிறார்?
மருத்துவர்கள் என்ன கூறுகின்றனர்?
வினோதினியின் மறுவாழ்வுக்கு நம் தளம் செய்யப்போகும் உதவிகள் என்ன?

விரிவான பதிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். சற்று பொறுத்திருக்கவும்.

இதைக் கூட நான் ஏன் ஒரு புகைப்படம் போட்டு ஒரு சின்ன பதிவா சொல்றேன்னா… “சுந்தர் வினோதினி அப்பாவை நேர்ல்ல போய் பார்க்கப்போறேன்னு சொன்னாரே? போனாரா? வினோதினி எப்படி இருக்காங்க?” என்று தெரிந்துகொள்ளும் ஒரு அன்பான ஏக்கம் உங்களில் பலருக்கும் இருக்கும். நேற்று என்னிடம் பேசிய அனைவரும் இது பற்றியே கேட்டனர். எனவே அதற்காகவே இந்த அப்டேட்.

ஒரே ஒரு விஷயம் :

வினோதினியை சந்தித்தபோது அவர் இருந்த நிலை… ரோஜாப் பூ ஒன்றை கசக்கி தீயில் வாட்டியது போன்று இருந்தது. அவர் தலைக்கு அருகில் கட்டிலில், கண்ட கந்த சஷ்டி கவசம் புத்தகம் என்னை ஏதோ செய்தது. தன் தாயாரிடம் அடிக்கடி அதை படிக்கச் சொல்லி கேட்கிறாராம் வினோதினி. கடவுள் தான் விரும்பும் தன்னை விரும்பும் பொம்மைகளை வைத்து தான் அதிகம் விளையாடுவானோ?

முருகா…. கல்லும் கரையுமே இதை கண்டால்… உனக்கு மனம் இரங்கவில்லையா ?

வினோதினி நலம் பெற்று பழைய நிலைக்கு விரைவில் திரும்ப அவருக்காக நமது பிரார்த்தனையில் சில வினாடிகள் தினசரி ஒதுக்குவோம்.

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா…
ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்

ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
யாரோ நல்லுள்ளம் கொண்ட ஒரு ஆத்மா வினோதினிக்கு உதவுவதற்கென்றே www.helpvinodhini.com என்ற தளத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Bi-lingual) தொடங்கியிருக்கிறார். வினோதினியின் தந்தையின் வங்கிக் கணக்கு எண் அதில் அளிக்கப்பட்டுள்ளது. உதவி செய்ய விரும்புகிறவர்கள் நேரடியாக செய்யலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum