தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A.

Go down

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A.  Empty “வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A.

Post  amma Mon Feb 18, 2013 12:43 pm

நம் நாட்டில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் மிக மிக கடுமையான தேர்வு என்று கருதப்படுவது சார்டட் அக்கவுண்டண்ட் தேர்வு. 21 வயதில் எழுத ஆரம்பித்து தொடர்ந்து எழுதி எழுதி 60 வயது கடந்தும் கூட அதை பாஸ் செய்ய முடியாது தவிப்பவர்கள் பலரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அக்கவுண்டன்சியில் புலி என்று சொல்லப்படுபவர்கள் கூட சற்று கிலியோடு பார்க்கும் தேர்வு இது.

இந்த தேர்வை மும்பையை ஒரு ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா என்பவர் முதல் முயற்சியிலேயே எழுதி பாஸ் செய்ததோடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். (607/800 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் இவர்.)

இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே இவரது குடும்பம் மும்பைக்கு குடி பெயர்ந்துவிட்டது.

“பொறந்த ஊருக்கு புகழைச் சேரு; வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு” என்கிற வரிகளுக்கு இணங்க தற்போது இந்த சாதனையின் மூலம் தமிழகத்தக்கு தேசிய அரங்கில் பெருமை தேடி தந்திருக்கிறார்.

மும்பையில் மலட் பகுதியில் 300 சதுர அடி பரப்பளவில் நெருக்கடி மிகுந்த ஒரு சிறிய வீட்டில் தன் பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசிக்கும் பிரேமா, நாடு முழுவதுமிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் முதல் மிகப் பெரிய வங்கிகள் வரை குவிந்து வரும் ஆஃபர்களால் திணறி வருகிறார். இவரோடு இவரது சகோதரர் தன்ராஜ் என்பவரும் சி.ஏ. பாஸ் செய்திருக்கிறார்.

==============================================================
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். (குறள் 615)

பொருள் : தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.
==============================================================

மிகவும் வறுமையான பின்னணியில் வளர்ந்த பிரேமா படிப்பில் படு சுட்டி. இவரது தந்தை ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் ரூ.15,000/-ல் தான் இவர்கள் குடும்பமே நடைபெற்று வந்துள்ளது. இந்த காலத்துல நாலு பேர் இருக்கும் ஒரு குடும்பம் நடத்த அதுவும் மும்பையில ரூ.15.000/- போதுமா?

(இங்கே எனக்கு தெரிந்த ஒருத்தர் ரூ.15,000/-க்கு புது மொபைல் வாங்கி அதை அடுத்த வாரமே தண்ணில (?) ஆப்பரேட் பண்ணி தண்ணிக்குள்ளே போட்டுட்டு வந்துட்டார்!)

பிள்ளைகள் படிப்பதால் அவர்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்று கருதி இவர் அம்மாவும் இந்த வயதிலும் ஏதோ வேலைக்கு போய் தன்னால் இயன்றதை குடும்பத்திற்கு தன் பங்கிற்கு கொடுத்து வந்துள்ளார்.

அம்மாவும் அப்பாவும் இவ்ளோ கஷ்டப்பட்டு நம்மளை படிக்க வைக்கிறாங்களே என்று கருதிய பிள்ளைகள் அவர்கள் கடமையை பொறுப்பை உணர்ந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தனர். இருவரும் சி.ஏ. இன்டர்ன்ஷிப் சேர்ந்து மாத வருமானமாக ரூ.12,000/- பெற்ற பிறகு தான் அம்மாவை வேலைக்கு போக அனுமதிக்கவில்லை.

கல்லூரியில் டிகிரி படிக்கும் போதே பிரேமா படிப்பில் படுசுட்டி தான். ஆகவே அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்து அதன் மூலமே படித்துள்ளார். கல்லூரி நிர்வாகம் இவரிடம் உள்ள திறமையை உணர்ந்து இவருக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. இளங்கலை தேர்வில் யூனிவர்சிட்டியில் இரண்டாம் ரேங்க் எடுத்துள்ளார் இவர். அதே போல எம்.காம் தேர்விலும் நல்ல ரேங்க் பெற்றுள்ளார். இன்று சி.ஏ. தேர்விலும் வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

சி.ஏ. படிப்புக்காக இவர் கோச்சிங் சேர்ந்த இன்ஸ்டிட்யூட்டும் இவருக்கு நல்ல சப்போர்டாக இருந்து இவர் படிக்க உதவியிருக்கிறார்கள். அங்கு கிடைத்த ரூ.40,000/- ஸ்காலர்ஷிப் இவரது குடும்பத்தின் பணக்கஷ்டத்தை ஓரளவு தீர்க்க உதவியிருக்கின்றது.

தனது அக்காவுக்கு எந்த சிரமத்தையும் தரக்கூடாது என்று கருதிய அவரது தம்பி தன்ராஜ், தன் படிப்புக்கும் செலவுக்கும் இரவு கால்-சென்டரில் பணிபுரிந்து அதன் மூலம் கிடைத்த சம்பளத்தில் தனது படிப்பை முடித்துள்ளார்.

பெற்றோருக்கு பொறுப்பான பிள்ளைகளாய் நடந்து படிப்பிலும் வெற்றிவாகை சூடி வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கும் பிரேமாவை – அவர் ஒருவேளை சென்னையில் – இருந்திருந்தால் எப்படியாவது நேரில் சென்று நமது தளத்திற்காக பேட்டி எடுத்து வந்திருப்பேன். ஆனால் மும்பையில் இருக்கிறார் பிரேமா. அதனால் என்ன ஃபோனிலேயே பேட்டி எடுத்தால் போச்சு என்று கடுமையாக முயற்சி செய்து கடைசியில் அவரை ஃபோனில் பிடித்தும் விட்டேன்.

கவர்னரை பார்க்க சென்றுகொண்டிருக்கும் பரபரப்பிலும் நமது தளத்திற்காக பிரத்யேக பேட்டி தந்திருக்கிறார் பிரேமா.

பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் இவர். மிக சரளமான தமிழில் பேசினார் பிரேமா. எந்தவித பகட்டோ பந்தாவோ இன்றி மிக மிக எளிமையாக நம்மிடம் பேசினார். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஜெயித்தவரல்லவா?

தமிழக வார இதழ்கள் மற்றும் முன்னணி பத்திரிக்கைகள் எதிலும் இவரது பேட்டி இதுவரை வெளிவந்ததாக தெரியவில்லை. (நாளிதழ்களில் வெளியாகியிருந்ததோடு சரி.)
கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை!

நாம் : முதற்கண் தமிழ் நாட்டுக்கும் தாய் நாட்டுக்கும் பெருமை தேடி தந்திருக்கும் உங்களுக்கு எங்கள் RIGHTMANTRA.COM சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வி.பிரேமா : ரொம்ப நன்றி சார். ரொம்ப நன்றி.

நாம் : இந்த வெற்றிக்கு பிறகு…. இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க?

செல்வி.பிரேமா : வார்த்தைகளால் விவரிக்க முடியாத சந்தோஷம் இது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நாம் : உங்களை பத்தி கொஞ்சம் எங்க வாசகர்களுக்காக கொஞ்சம் சொல்லுங்களேன். உங்க ஸ்கூலிங், எப்போ மும்பைக்கு போனீங்க? படிப்பு இதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…

செல்வி.பிரேமா : நான் பிறந்தது தமிழ்நாட்டுல என்றாலும் ரெண்டு வயசு இருக்கும்போதே மும்பை வந்துட்டோம். நான் படிச்சது இங்கே மும்பையில மலாட் முனிசிபல் ஸ்கூல்ல தான். ஏழாம் வகுப்பு வரைக்கும் தமிழ் மீடியம் தான் படிச்சேன். அப்புறமா நகிம்தாஸ் காண்ட்வாலா காலேஜ்ல பி.காம். அப்புறமா எம்.காம்.

நாம் : எப்படி இது சாத்தியமாச்சு?

செல்வி.பிரேமா : வேறன்ன…. கடின உழைப்பு ஒன்னு தான்.

நாம் : உங்க குடும்ப உறுப்பினர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

செல்வி.பிரேமா : எனக்கு ஒரு அக்கா ஒரு தம்பி. அக்காவுக்கு கல்யாணம் ஆயிடிச்சு. தம்பி என் கூட தான் சி.ஏ. படிச்சான். அவனும் பாஸ் பண்ணிட்டான்.

நாம் : வாவ்…. ஒரே குடும்பத்துல ரெண்டு சார்டட் அக்கவுண்டண்ட்ஸ். கங்ராஜுலேஷன்ஸ்.

நாம் : அப்பா அம்மா என்ன சொல்றாங்க ?

செல்வி.பிரேமா : அவங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையா இருக்கு. அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.

நாம் : மறக்க முடியாத பெரிய பாராட்டு?

செல்வி.பிரேமா : நிறைய பேர் பாராட்டினாங்க. ஒருத்தரைவிட்டு ஒருத்தரை எப்படி சொல்றது. இதோ இப்போ மும்பை கவர்னரை பார்க்க போய்கிட்டுருக்கேன். இது கூட மிகப் பெரிய பாராட்டு தான்.

நாம் : உங்க இன்ஸ்பிரேஷன் யார்?

செல்வி.பிரேமா : என்னோட காலேஜ்ல எனக்கு கிளாஸ் எடுத்த பல ஆசிரியர்கள் சி.ஏஸ். தான். அவங்க தான் இதுல எனக்கு இன்ஸ்பிரேஷன்.

நாம் : இந்த சாதனையை நீங்க செய்றதுக்கு தூண்டுகோளா இருந்தது எது? அதாவது உங்களுக்குள்ளே இந்த வெறியை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது எது? இதுக்கு பின்னாடி நிச்சயம் ஏதாவது சம்பவம் இருக்கணும்…..

செல்வி.பிரேமா : (சற்று யோசிக்கிறார்…. சொல்லத் தயங்கி பின்னர் சொல்கிறார்) ……..ம்ம்ம்ம்…… சொந்தக்காரங்க மத்தியில நாங்க பட்ட அவமானம் தான். அவங்க எல்லார் எதிர்லயும் எங்க குடும்பத்தை தலை நிமிர வைக்கனும்னு நினைச்சேன். இப்போ புகழ் வந்ததுக்கு பிறகு எங்களை ஒதுக்கி வெச்சவங்க எல்லாம் எங்க கிட்டே பேசணும்னு துடிக்கிறாங்க. எங்களை அவங்க சொந்தம்னு சொல்லிக்க ஆசைப்படுறாங்க. எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லிக்கிறாங்க.

சொந்தக்காரங்க மத்தியில நாங்க பட்ட அவமானம் தான். அவங்க எல்லார் எதிர்லயும் எங்க குடுமபத்தை தலை நிமிர வைக்கனும்னு நினைச்சேன். இப்போ புகழ் வந்ததுக்கு பிறகு எங்களை ஒதுக்கி வெச்சவங்க எல்லாம் எங்க கிட்டே பேசணும்னு துடிக்கிறாங்க. எங்களை அவங்க சொந்தம்னு சொல்லிக்க ஆசைப்படுறாங்க. எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லிக்கிறாங்க.

நாம் : இந்த சாதனையை நீங்க செய்றதுக்கு காரணமா இருந்தது எது?

செல்வி.பிரேமா : எனக்கு சி.ஏ. படிப்பு மேல் இருந்த ஆர்வமும் என் உழைப்பு மேல் எனக்கு இருந்த நம்பிக்கையும் தான். பாஸ் பண்ணுவேன்னு தெரியும். ஆனா முதல் ரேங்க்ல பாஸ் பண்ணுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. இது ஒரு சுவீட் சர்ப்ரைஸ் தான்.

நாம் : இந்த வெற்றியை யாருக்கு டெடிகேட் பண்ண விரும்புறீங்க?

செல்வி.பிரேமா : என்னோட அப்பா அம்மா மற்றும் என்னோட புரொபசர்ஸ், ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் இந்த வெற்றியை டெடிகேட் பண்றேன்.

நாம் : கடவுள் நம்பிக்கை இருக்கா? கடவுளோட அருள் இதுன்னு நினைக்கிறீங்களா?

செல்வி.பிரேமா : நிச்சயமா இருக்கு. ஆனா கடவுள் இருக்காரேன்னு நாம உழைக்காம இருக்க கூடாது. நாம நம்ம பாட்டுக்கு கடினமா உழைச்சிட்டு கடவுள் கிட்டே வேண்டினா… கண்டிப்பா அதுக்கு பலன் இருக்கும்.
கடவுள் இருக்காரேன்னு நாம உழைக்காம இருக்க கூடாது. நாம நம்ம பாட்டுக்கு கடினமா உழைச்சிட்டு கடவுள் கிட்டே வேண்டினா… கண்டிப்பா அதுக்கு பலன் இருக்கும்.

நாம் : சி.ஏ. ப்ரிப்பேர் பண்றவங்களுக்கு நீங்க சொல்ல விரும்புறது என்ன?

செல்வி.பிரேமா : FOCUSED HARDWORK பண்ணுங்க. நிச்சயம் நீங்க ஜெயிக்கலாம்.

நாம் : தோல்வியில் துவண்டு போகும் உள்ளங்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?

செல்வி.பிரேமா : உங்களோட லட்சியத்தை அடிக்கடி நினைச்சிகிட்டே இருக்கணும். அதையே மூச்சா நினைச்சு வாழனும். அதுக்காக உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்பணிக்கணும். வானமும் ஒரு நாள் வசப்படும்.

நாம் : அப்பா அம்மாவை அடுத்து எப்படி கவனிக்கப்போறீங்க ?

செல்வி.பிரேமா : எங்கப்பா எங்களுக்காக நிறைய உழைச்சிட்டார். அவருக்கு நிச்சயம் ஒய்வு தேவை. அடுத்து சென்னையில் ஒரு வீடு வாங்கும் திட்டம் இருக்கு.

நாம் : வேலையில எப்போ சேரப்போகிறீர்கள் ?

செல்வி.பிரேமா : நிறைய ஆபர்ஸ் வருது. நல்ல கம்பெனியா பார்த்து சேரப்போகிறோம்.

நாம் : இறுதியாக எங்கள் தள வாசகர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?

செல்வி.பிரேமா : கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. முயன்றால் முடியாதது எதுவமே இல்லை இந்த உலகத்துல. நீங்க எல்லாரும் நல்லா இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இனி நான் இந்த தளத்தின் ரெகுலர் விசிட்டர். உங்களோட எண்ணத்துக்கும் முயற்சிக்கும் என்னோட நன்றி. இந்த தளம் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

நாம் : நீங்கள் மேன்மேலும் சாதனைகள் புரிந்து மேலும் அனைவருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம். நன்றி!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum