நந்தி என்பவர் யார்?
Page 1 of 1
நந்தி என்பவர் யார்?
சிலாத முனிவர்- சாரு லட்சனை தம்பதிக்கு நெடுங்காலமாக புத்திர பாக்கியம் கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார் சிலா தர். அவரது தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் மழலை வரம் அருளினார். இறை அருளால் பிறந்த பிள்ளைக்கு நந்தி என பெயர் சூட்டி வளர்த்தனர்.
ஆனாலும் மகன் பிறந்த மகிழ்ச்சியை அத்தம்பதியார் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. ஏனெனில் பிள்ளைக்கு ஆயுள் எட்டு வருடங்கள்தான் என்று நிபந்தனை விதித்திருந்தார் சிவபெருமான். அந்தக்காலம் நெருங்க நெருங்க பெற்றோரின் கவலை அதிகரித்தது.
இதை உணர்ந்த சிறுவனான நந்தி காரணம் கேட்க, வேறு வழியின்றி உண்மையைக் கூறினர். `கவலை வேண்டாம்' என்று அவர்களை ஆறுதல்படுத்திய நந்தி, தனியே சென்று சிவனைக் குறித்து தவம் மேற்கொண்டான். சிவனருளால் பூரண ஆயுள் பலமும், கயிலைக்கே காவலனாகும் பேறும் பெற்றான். அதனால் அதிகார நந்தி என பெயரும் பெற்றான்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
» சனி என்பவர் யார்?
» கலாம் என்பவர் யார்?
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
» சனி என்பவர் யார்?
» கலாம் என்பவர் யார்?
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum