திருப்பாடகம் கோவில் (காஞ்சீபுரம்)
Page 1 of 1
திருப்பாடகம் கோவில் (காஞ்சீபுரம்)
இத்தலம் பாண்டவ பெருமாள் கோவில் என வழங்கப்படுகிறது. பெரிய காஞ்சீபுரம் கங்கை கொண்டான் மண்டபம், சங்கர மடம், திருவேகம்ப நாதர் திருக்கோவில் ஆகியவற்றுக்குத் தென் மேற்கில் கி.மீ. தொலைவில் உள்ளது. இது திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டபதி.
மூலவர் பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். ருக்மணியும், சத்யபாமாவும், தாயாராக இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். இங்குள்ள கர்ப்பக்கிருகம் மிகப்பெரிதாக இருப்பதால், அர்ச்சகர்கள், தீவட்டியைக் காட்டி, மூலவரின் திருமுக மண்டலத்தைத் தரிசிக்கப் பண்ணுகிறார்கள்.
ஜனமேஜய மஹாராஜன், இங்கு வந்து யாகம் செய்து பாண்டவ தூதனாக பகவான் வந்து விஸ்வரூபம் எடுத்ததைக் காண ஆசைப்பட்டதால் அவ்வாறே அவனுக்கு இங்கு சேவை சாதித்ததாக வரலாறு. திருமழிசையாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும், இந்தப் பாண்டவ தூதனைப் பாசுரங்களால் பேசி இருக்கிறார்கள்.
பாண்டவர்களின் பெரிய பலம் கிருஷ்ணன், இதையறிந்த துரியோதனன் கண்ணனை அழித்து விட்டால் பாண்டவர்களை எளிதில் வென்று விடலாமென்று எண்ணி, கண்ணனை தன் இடத்திற்கு நயவஞ்சகமாக அழைத்தான். கண்ணன் அமரக்கூடிய இடத்தில் ஒரு ஆசனத்தைப் போட்டு அதனடியில் ஒரு நிலவறையை அமைத்தான்.
அந்த ஆசனத்தில் அமர்ந்தவுடன் கண்ணன், அந்த ஆசனத்தோடு பாதாளத்தில் விழுவான். அங்கிருக்கும் மற்போர் வீரர்கள், உடனே கண்ணனைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்தான் துரியோதனை. கண்ணனும், துரியோதன் அழைப்பை ஏற்று அவனிடத்திற்கு வந்து அங்கு தனக்காகப் போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்தான்.
துரியோதன் திட்டப்படி அந்த ஆசனம் பாதாளக் குகையில் விழ அங்கு இருந்த வீரர்கள் கிருஷ்ணனை கொல்ல முயற்சி செய்தனர். பகவான் கிருஷ்ணனோ விஸ்வரூபம் எடுத்து அந்த மல்யுத்த வீரர்களைக் கொன்றார். இந்தக் கதையைக் கேட்ட ஜெனமே ஜெய அரசன், காஞ்சீபுரத்தில் அச்வமேத யாகம் செய்து பகவான் கிருஷ்ணனை வரவழைத்து அன்றைக்கு பாதாள அறையில் விஸ்வரூபம் எடுத்துக் கொன்ற காட்சியை நினைவுபடுத்தி தனக்கு இங்கேயே அந்த விஸ்வரூபக் காட்சியைக்காட்ட வேண்டும் என்று வேண்டினான்.
பக்தர்களுக்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அந்த விஸ்வரூப காட்சியை காஞ்சீபுரத்தில் காட்டிய இடம்தான் இந்த திருப்பாடகம். காரியத்தடைகள் நீங்க வேண்டுமென்றாலும் புதிய முயற்சியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்றாலும் திருப்பாடகம் வந்து இங்குள்ள கோவிலில் வளர்பிறை சதுர்த்தி அன்று பெருமாளை வேண்டியக் கொண்டு ஹோமம் செய்தால் பகவான் அத்தனைத் தடங்கல்களையும் போக்குவார்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திருப்பாடகம் கோவில் (காஞ்சீபுரம்)
» திருப்பாடகம் கோவில் - காஞ்சீபுரம்
» காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
» திருப்பாடகம் கோவில் (காஞ்சீபுரம்)
» திருவெட்கா கோவில்(காஞ்சீபுரம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum